உடல் பருமனா? இந்த நோய்கள் உங்களை ஆட்கொள்ளலாம், ஜாக்கிரதை!!
Diseases Caused by Obesity: உடல் பருமனால் நமது உடலை ஆட்கொள்ளக்கூடிய 8 நோய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் பருமன் மற்றும் நோய்கள்: மனித இனத்தை பல வித நோய்கள் தாக்குகின்றன. சில நோய்களால் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால், இந்த நோய்களின் காரணமாக நம்மை பிற ஆபத்தான நோய்கள் தாக்கக்கூடும். அத்தகைய உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். இதனால் மனிதர்களின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படுவதுடன் கொலஸ்ட்ரால் பிரச்சனை, நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பல பிரச்சனைகளை இது ஏற்படுத்துகிறது.
உடல் பருமனால் நமது உடலை ஆட்கொள்ளக்கூடிய 8 நோய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கீல்வாதம்:
உடல் பருமன் காரணமாக அதிகரித்த கூடுதல் எடை முழங்கால்களில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஒவ்வொரு மனித உடலிலும் அதன் விளைவு மாறுபடும். ஆனால் சிலருக்கு, உடல் பருமனால் அதிகரிக்கும் எடை, முழங்கால் மூட்டுகளில் இருக்கும் குருத்தெலும்புகளை (கார்டிலேஜ்) சேதப்படுத்துகிறது. இந்த நிலை மேலும் அதிகமாகி கீல்வாதத்தின் வடிவத்தை எடுக்கும்.
பக்கவாதம் மற்றும் இதய நோய்:
எடை அதிகரிக்கும் மக்களுக்கு உடலில் அதிக கொழுப்பு இருப்பதுடன் உயர் இரத்த சர்க்கரை பிரச்சனைகளும் ஏற்படும். இந்த இரண்டு நிலைகளும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன.
நீரிழிவு டைப்-2:
நீரிழிவு டைப் -2 உடல் பருமன் தொடர்பான மிகவும் பொதுவான நோய்களில் சேர்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கைமுறை நோயாக உள்ள இரத்த சர்க்கரை நோய் வகையாகும் இது.
புற்றுநோய் ஆபத்து:
உடல் பருமன் காரணமாக சில வகையான புற்றுநோய்கள் தூண்டப்படுகின்றன. அதனால் தான் உடல் பருமன் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் போன்றவை உடல் பருமன் உள்ளவர்களின் உடலை எளிதில் தாக்கக்கூடும்.
மேலும் படிக்க | உடல் எடையை கஷ்டப்படாம குறைக்க காலையில் இதை சாப்பிடுங்க..! 5 சிறந்த உணவுகள்
பித்தப்பை நோய்:
பித்தப்பை தொடர்பான நோய்கள் ஃபிட்டான உடல் உள்ளவர்களைக் காட்டிலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றன. குறிப்பாக மிக விரைவாக உடல் எடை ஏறும் அல்லது உடல் எடை இறங்கும் நபர்களுக்கு மிக விரைவாக இந்த நோய்கள் தாக்கும். ஆகையால், பித்தப்பை கல் பிரச்சனையை தவிர்க்க, உடல் எடையை குறைக்கும் போது, ஒவ்வொரு வாரமும் ஒரு பவுண்டு எடை குறைக்க வேண்டும்.
தூக்கக் கோளாறுகள்:
உடல் பருமன் காரணமாக, அதிக தூக்கம் அல்லது குறைவான தூக்கம், இந்த இரண்டு பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று ஏற்படலாம். அதிகப்படியான கொழுப்பு காரணமாக, சுவாசக் குழாயின் மேல் பகுதி சுருங்குகிறது. இதனால் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இரத்த விநியோகம் குறைகிறது. எனவே அதிக தூக்கம் ஏற்படுகிறது.
ஆஸ்துமா:
வயிறு மற்றும் மார்பில் அதிகப்படியான கொழுப்பு குவிவதால் நுரையீரல் சுருங்குகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுகிறது.
யூரிக் ஆசிட் பிரச்சனை:
இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனை கீல்வாதம் எனப்படும். இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால், மூட்டுகளில் வலி தொடங்குகிறது.
மேலும் படிக்க | புற்றுநோய்க்கான மருந்துகளில் கொடிய பாக்டீரியா! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ