இரவில் மட்டும் தூக்கத்தை தியாகம் செய்யாதீர்கள்... மிக மிக ஆபத்து!
Defects Of Improper Sleep Routine: ஒருவருக்கு சரியாக தூக்கம் வராவிட்டாலோ அல்லது நீண்ட காலமாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தாலோ ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Defects Of Improper Sleep Routine: அனைவருக்கும் ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 மணிநேரம் தூக்கம் தேவை. இருப்பினும், அமெரிக்கர்கள் தரப்பில் வந்த வந்தவர்களுக்கு 3இல் ஒருவருக்கும் அதிகமானோர் பரிந்துரைக்கப்பட்ட அளவு தூங்குவதில்லை என்று கூறுகிறார்கள்.
இது ஓரிரு நாட்கள் என்றில்லாமல், சீரான இடைவெளியில் போதுமான அளவிற்கு தூங்கவில்லை என தெரியவந்துள்ளது. இது காலப்போக்கில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், அதனை மோசமாக்கவும் செய்யும் என கூறப்படுகிறது.
இரவில் 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் ஒவ்வொருவருக்கும், மாரடைப்பு, ஆஸ்துமா, மனச்சோர்வு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பின்வரும், இந்த உடல்நலப் பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுலாம்.
உயர் ரத்த அழுத்தம்
சாதாரண தூக்கத்தின் போது, ரத்த அழுத்தம் குறைந்து காணப்படும். தூக்கத்தில் சிக்கல்கள் இருந்தால், உங்கள் ரத்த அழுத்தம் நீண்ட காலத்திற்கு அதிகமாக இருக்கும். இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கான முக்கிய ஆபத்துகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்றாகும். சுமார் 75 மில்லியன் அமெரிக்கர்கள் உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது மூன்றில் ஒருவருக்கு அதில் உள்ளது.
வகை 2 நீரிழிவு
நீரிழிவு என்பது உங்கள் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும் ஒரு நோயாகும். இது உங்கள் ரத்த நாளங்களை சேதப்படுத்தும். சில ஆய்வுகள் போதுமான நல்ல தூக்கம் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
மேலும் படிக்க | Anemia Alert: இரத்த சோகையா? இரும்புச்சத்து குறைபாடா? இதை செய்து பாருங்க
உடல் பருமன்
தூக்கமின்மை ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். பெரியவர்களை விட அதிக தூக்கம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு இது பொருந்தும். போதுமான தூக்கம் இல்லாததால் பசியைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்படலாம்.
இதயத்தையும் பாதிக்கும்
காலப்போக்கில், தூக்க பிரச்சனைகள் உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம். தூக்கத்தின் போது உங்கள் சுவாசப்பாதை மீண்டும் மீண்டும் தடுக்கப்படும்போது, உறக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் குறுகிய காலத்திற்கு சுவாசப் பிரச்னை ஏற்படும். உடல் பருமன், இதய செயலிழப்பு போன்ற சில உடல்நலப் பிரச்சனைகளால் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
உறக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல், உங்கள் உடலுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவை பாதிக்கும். உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. வெள்ளை இனத்தவர்களை விட கறுப்பின மக்கள் மற்றும் பூர்வீக அமெரிக்கர்களிடையே இது மிகவும் பொதுவானது.
தூக்கமின்மை என்பது தூக்கம் வருவதில் சிக்கல், தூங்குவதில் பிரச்சனை அல்லது இரண்டையும் சேர்த்து குறிக்கிறது. பெரியவர்களில் இரண்டில் ஒருவருக்கு, ஒரு கட்டத்தில் குறுகிய கால தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் 10 பேரில் ஒருவர் நீண்டகால தூக்கமின்மையைக் கொண்டிருக்கலாம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
தூக்கமின்மை உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையது என்றாலும், காலப்போக்கில் மோசமான தூக்கம் உங்கள் இதயத்தை பாதிக்கக்கூடிய ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு வழிவகுக்கும். இதில் அதிக மன அழுத்தம், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாதது மற்றும் ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகள் ஆகியவையால் ஏற்படும்.
மேலும் படிக்க | எக்கச்சக்கமா கொழுப்பு இருக்கா? இதை குடிங்க.. ஈசியா குறைக்கலாம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ