Red Meat Side Effects: காலப்போக்கில் நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மாறிவிட்டன, நான் சுத்தமான சைவம் என்றும் கூறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அசைவ உணவுகளை விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்ட இந்தக் காலகட்டத்தில், அளவிற்கு அதிகமாக இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்வது, எலும்பு பலவீனம், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இறைச்சி உணவு வயிற்றின் செரிமானச் சுமையை அதிகரித்து, கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதனால் அசைவ உணவு சாப்பிடுவதில் கட்டுப்பாடு தேவை.


இறைச்சி உடலுக்கு வலுவூட்டுவது மட்டுமின்றி புரத சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தினமும் இறைச்சி உண்பவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் போன்ற நோய்கள் உட்பட பல கடுமையான நோய்களுக்கு ஆளாகலாம் (Health Tips) என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


சிவப்பு இறைச்சி உணவுகளில் அதிக அளவு கொழுப்பு, புரதம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது என்றாலும், அவற்றில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. இது ஆரோக்கியத்தை பாதிக்கும். சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். அதிக அளவு செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் கல்லீரல் தொடர்பான நோய்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், டைப் - 2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது, சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது புற்று நோய்க்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது.


சிவப்பு இறைச்சியை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க, நாம் சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். சிவப்பு இறைச்சியுடன் நார்ச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றையும் சாப்பிட வேண்டும். மேலும், ஒரு உணவு நிபுணரிடம் ஆலோசனை மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு சிவப்பு இறைச்சியை நாம் உட்கொள்ள வேண்டும் என்பதைக் கண்டறியவும். இது நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.


மேலும் படிக்க | தீராத தலைவலியா... மாத்திரை வேண்டாம்... இந்த வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்


நாம் சிவப்பு இறைச்சியின் நுகர்வு மிதமாக இருக்க வேண்டும் மற்றும் அதன் தீமைகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்திற்கு, நமது உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதும், சரிவிகித உணவை உட்கொள்வதும் முக்கியம். இதன் மூலம் சிவப்பு இறைச்சியின் தீமைகளை தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.


உலக சுகாதார அமைப்பும் அதிக அளவு இறைச்சியை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு என எச்சரித்துள்ளது. குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவை ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் என்று பல முறை எச்சரித்துள்ளது. 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க வீட்டிலேயே இதை எல்லாம் செய்து பாருங்கள்: உடனே பலன் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ