Symptoms of Kidney Problem in Tamil: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை பெரும்பாலானோர் சந்திக்கின்றனர். உடலில் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிக அத்தியாவசியமாக இருக்கும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்றாகும்.
சிறுநீரகம், இரத்தத்தில் உள்ள அழுக்கு மற்றும் கூடுதல் திரவங்களை உடலில் இருந்து வெளியேற்றுவது போன்ற முக்கிய வேலைகளை செய்கிறது. சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ, அல்லது சிறுநீரகம் சேதமடைந்தாலோ, உடலில் உள்ள கழிவுகளை வெளியே அகற்ற முடியாத நிலை ஏற்படலாம். ஆகையால் இதை பாதுகாப்பாக, எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் பராமரிப்பது மிக அவசியமாகும்.
சிறுநீரக பிரச்சனையின் அறிகுறிகள்
சிறுநீரகம் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால், திவீர உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படால் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை கண்காணிப்பது மிக அவசியம் ஆகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் கழிப்பதற்காக இரவில் பல முறை எழுந்திருப்பது சிறுநீரக பிரச்சனைகளின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது உங்கள் தூக்கத்தை சீர்குலைத்து உங்களை சோர்வடையச் செய்யலாம். உங்கள் சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதி குறிக்கும் பொதுவான் அறிகுறிகளில் ஒன்று இது.
சிறுநீரில் தோன்றும் நுரைகள்
சிறுநீரில் நுரை உருவாகி, குமிழ்கள் தெரிந்தால், சிறுநீரில் புரதம் அதிகம் வெளியேறுகிறது என்று அர்த்தம். எனவே, இது சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையை பெற்று பரிசோதனை செய்யுங்கள்.
மேலும் படிக்க | ஆண்களை அச்சுறுத்தும் புரோஸ்டேட் புற்றுநோய்: இந்த அறிகுறிகள் அலர்ட் ஆகிடுங்க!!
சிறுநீரக நிறம் மற்றும் துர்நாற்றம் வீசும் சிறுநீர்
சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதைக் குறிக்கலாம். ஆரோக்கியமான சிறுநீர் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறுநீரின் நிறம் மாறி, அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரில் துர்நாற்றம் வீசுவதும் ஒரு முக்கிய அறிகுறியாகும். இந்த மாற்றங்களைக் கண்காணிப்பது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவும். தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெற உதவியாக இருக்கும்.
கால்களில் வீக்கம்
பாதங்கள் மற்றும் குதிகால் சுற்றி வீக்கங்கள் இருப்பது, சிறுநீரக செயலிழப்பு அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகத்தில் போதுமான அளவு சோடியம் இல்லாத போது, சிறுநீரகங்கள் இயல்பாக செயல்படாததால், அதிகப்படியான திரவம் உடலில் சேர்ந்து, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது.
சிறுநீரக பாதிப்பின் பிற அறிகுறிகள்
1. சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் இரத்த கசிவு
2. சோர்வு, பசியின்மை
3. சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சி
4. தூக்கமின்மை பிரச்சனை
மேலே குறிப்பிடுள்ள அறிகுறிகள் இருந்தால், அதை அலட்சியம் செய்யாமல், உடனடியான மருத்துவரை அணுகி தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | Brain Stroke: மூளை பக்கவாதம்... அறிகுறிகளும்... வராமல் தடுக்க செய்ய வேண்டியவையும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ