க்ரைண்டர் மாவுக்கும், மிக்சி சட்டினிக்கும் பழகிபோன என் நாக்கிற்கு ஒரு நாள் என் பாட்டி புதுவிதமான சுவை அளித்தார் என்றால் அது மிகையாகாது. நாமது வாழ்கையில் பெரும்பாலும் சுவையான உணவை சாப்பிடவே உடலை வருத்தி உழைக்கிறோம். ஆனால், அந்த சுவை துரித உணவுகளின் கையேந்தி பவனிலும், வீட்டில் அரைக்கும் மிக்சி சட்டினியிலுமே முடிந்து விடுகிறது. அன்று ஒரு நாள் பாட்டி ஆட்டுக்கல்லில் மாவாட்டிக்கொண்டு இருந்தார். ஒரு கையில் குளவி மறு கையில் மாவை தள்ளி விட்டவாறு அந்த வேலையை செய்து கொண்டு இருந்தார். நான் பாட்டியிடம் எதற்கு உனக்கு இந்த தேவை இல்லாத வேலை, க்ரைண்டரில் போட்டால் பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விடும் உனக்கும் கை வலி இருக்காது என்று சொன்னேன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

73 வயதான என்பாட்டி என்னிடம் இன்றும் நான் ஆரோக்கியமாக இருக்க இந்த ஆட்டுக்கலும், அம்மிக்கலும்தான் காரணம் என சொன்னார். அடுத்த நாள் காலையில் அடுப்பில் இரும்பு கல் வைத்து வாழை தண்டில் என்னை தொட்டு கல்லில் தேய்த்து சொய் என்ற சத்தத்தோடு மாவை கல்லில் ஊற்றி பரத்தி விட்டு சுட்ட அந்த தோசையின் மனம்.. எங்கேயோ நின்றுகொண்டிருந்த என் மூக்கை துளைத்து சுவையின் நரம்புகளை தூண்டி விட்டது. அதனோடு சேர்த்து மிளகாய் வருத்து சின்ன வெங்காயம் சேர்த்து அம்மியில் அரைத்த அந்த காரச்சட்டினி.. அப்பப்பா.. அந்த சுவைக்கு நான் இன்றும் அடிமைதான். 


மேலும் படிக்க | கோடையில் இந்த பானங்கள் குறைந்த இரத்த அழுத்தத்தை குணப்படுத்த உதவும்



ஆனால், இதுபோன்ற ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த உணவு பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருகிறது என்பது வருத்தத்தைதான் தருகிறது. பல ஆயிரம் ரூபாய் பணம் செலவு செய்து ஜிம்மிற்கு சேன்று உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என நினைக்கும் இன்றைய தலைமுறை.., பழங்கால பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றினால் போதும் என்பதை கண் மூடித்தனமாக மறுத்து வருகிறது. இன்றும் பல கிராமங்களில் ஆட்டுக்கல், அம்மிக்கல் உள்ள வீடுகள் இருக்கத்தான் செய்கின்றன. 


அம்மியில் அரைக்கும்போது அந்த உணவுக்கு குளுர்ச்சி கிடைத்து உணவின் பக்குவமும், சுவையும் மாறாமல் கிடைக்கிறது. அதனுடன் கல்லோடு கல் உரசி அதனோடு உணவுப்பொருட்களும் அரைபடும்போது அந்த கல்லில் இருக்கும் சத்துக்களும் இயற்கையாகவே உடலுக்குள் செல்கிறது. இது ஆரோக்கியத்திற்கு பெரும் பலனை தருகிறது. எதிர்கால தலைமுறை இந்த அவசரமான வாழ்கை நடைமுறைக்கு இடையே கொஞ்சம் ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொண்டால் அழிந்து வரும் அம்மிக்கல்லும், ஆட்டாங்கல்லும் மறு வாழ்வு பெரும்.


மேலும் படிக்க | Beat The Heat: கோடையையும் காதலிக்க செய்ய இந்த உணவுகள் போதுமே


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR