Diabetes: சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Cure Diabetes: சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும். ஆனால் நீரிழிவுக்கு எதிரான உணவுகளை தவிர்ப்பதும், மருந்துகளை எடுத்துக் கொள்வதும் சர்க்கரை நோயை போக்குமா?
புதுடெல்லி: நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் இன்று மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஒருமுறை சர்க்கரை நோய் வந்து விட்டால் கவனமாக இருக்க வேண்டும் என்பதும், உணவு பழக்கங்களில் மாறுதல்களை செய்வதும் அவசியமாகிறது. மருத்துவரின் பரிந்துரைகளின்படி, உடற்பயிற்சி செய்து, ரத்த சர்க்கரையை சீராக வைக்கும் உணவுகளை உட்கொள்வது, நீரிழிவுக்கு எதிரான உணவுகளை தவிர்ப்பது என பலவிதங்களில் முயன்றாலும் சர்க்கரை நோய் என்பது குணமாகக்கூடியதா என்ற கேள்விக்கான பதில், இல்லை என்றே நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் உண்மை என்ன?
உண்மையில் சர்க்கரை நோயை குணப்படுத்துவது சாத்தியமா? பதில் முயற்சி திருவினையாக்கும் என்பது தான். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது நோய் தீர்ந்துவிட்டது என்று தெரிவித்தால், அதற்கு அவர் பல முயற்சிகளை எடுத்திருப்பார் என்று சொல்லலாம்.உடல் எடையை குறைப்பது, ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது மற்றும் உடற்பயிற்சி செய்தல் எனஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்தபிறகு, இந்த நோயை ஒருவர் கட்டுப்படுத்தி இருப்பார்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை விரட்ட ‘இந்த’ பழத்தின் விதைகளே போதும்! பயன்படுத்தும் முறை!
இதற்கான பரிசு, அவர் நீரிழிவு மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்த முடிந்ததாகவே இருக்கும். ப்ரீடியாபயாட்டீஸ், டைப் 2 நீரிழிவு, அல்லது கர்ப்பகால நீரிழிவு நோய் என சர்க்கரை நோய் கண்டறியப்பட்ட உடனே, ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை உடனடியாகத் தொடங்கிவிட்டால், சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால், சர்க்கரை நோய் இருப்பது தெரிந்த உடனே அதை குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் மேற்கொள்ளாவிட்டால், கணையத்தின் செல்கள் சேதமடைந்துவிடும்.
சர்க்கரை நோயை குணப்படுத்துவது என்பது, செய்த வாழ்க்கை நடைமுறை மாற்றங்களை தொடர்ந்து கடைபிடிப்பதிலும் தொடர வேண்டும். ஏனென்றால், சர்க்கரை நோய் என்பது, தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டிய ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது.
மேலும் படிக்க | காலையில் புல் தரையில் வெறுங்காலுடன் நடந்தால் இத்தனை நன்மைகளா..!
அதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாவதால் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்க்க தொடர்ந்து உடற்பயிற்சி, சத்தான உணவுகள், உடல் எடையை பராமரிப்பது என அதிக கவனத்துடன் வாழ்க்கையை திட்டமிட வேண்டும்.
ஆனால், நீரிழிவு நோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியவில்லை என்றாலும், சர்க்கரை அளவை நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்தப்படாவிட்டாலும், கணையத்தின் செல்கள் நிரந்தரமாக சேதமடையும், இதனால் அவை இன்சுலின் உற்பத்தி செய்யாது. இது நடந்தால், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டுமே பயனுள்ளதாக இருக்காது என்பது கசப்பான உண்மை. அதுமட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை பயபடுத்த வேண்டிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கணையம் ஏற்கனவே போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாத, வகை 1 நீரிழிவு மற்றும் LADA ஆகியவற்றையும் குணப்படுத்த முடியாத் என்பதே உண்மை. அந்த சூழ்நிலையில் நீரிழிவு நோயை நிர்வகிக்க முடியும் ஆனால் குணப்படுத்த முடியாது.
மேலும் படிக்க | முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னத்தை நீக்க சில ‘முக’ பயிற்சிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ