கிராம்பை இப்படி பயன்படுத்தினா ஆபத்து? இந்த காம்பினேஷன் வேண்டாமே!

அதிகப்படியான கிராம்பு தண்ணீரை அருந்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  

Last Updated : Nov 4, 2022, 03:30 PM IST
  • கிராம்பு தண்ணீரை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
கிராம்பை இப்படி பயன்படுத்தினா ஆபத்து? இந்த காம்பினேஷன் வேண்டாமே! title=

Clove Water: அதிகப்படியான கிராம்பு தண்ணீரை அருந்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உடலின் ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக கருதப்படும் கிராம்பு பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பை அப்படியே உட்கொள்ளலாம், மசாலாவாக பயன்படுத்தலாம் தண்டுகள் அல்லது உலர்ந்த பூ மொட்டுகளை உணவில் பயன்படுத்துகிறோம். கிராம்பு எண்ணெய் பல மருத்துவ நன்மைகளைக் கொண்டது. பொதுவாக ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கிராம்பு  நன்மையைத் ததான் செய்யும் என்றாலும் அதை எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் தெரியுமா?  

கிராம்பு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்
கிராம்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதற்காக அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களைக் கூட மிதமான அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆரோக்கியமானதாகக் கருதப்படும் பொருட்களே, ஆரோக்கியத்திற்கு எதிரியாகும்.

அதிலும், பலர் கிராம்பு போட்டு கொதிக்க வைத்த வெந்நீரை அருந்துவார்கள். அது அளவுடன் இருக்கும்போது அமிர்தமான மருந்தாக செயல்படும். அதுவே அளவுக்கு மிஞ்சினால் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

சிலருக்கு அலர்ஜியைத் தூண்டலாம்
கிராம்புகளில் யூஜெனோல் இருப்பதால் ஒவ்வாமையையும் தூண்டலாம். அதிலுள்ள கலவை, உடலில் உள்ள புரதங்களுடன் வினைபுரியும் போது, ​ சருமத்தில் அழற்சியைக் கொண்டுவருகிறது. இது உடலின் சில பகுதிகளில் அல்லது வாய்வழி குழியில் எரிச்சலை ஏற்படுத்தும். அதிகமாக உட்கொண்டால் நாக்கில் வலி ஏற்படும்.

மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?
 
இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது
கிராம்பு இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது, ​​​​உயர் இரத்த சர்க்கரை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நல்லது, ஆனால் ஏற்கனவே இரத்த சர்க்கரை குறைவாக இருப்பவர்களுக்க்கு மேலும் சிக்கலை அதிகரிக்கும். எனவே, சர்க்கை அளவு குறைபவர்கள், அதிக கிராம்பை பயன்படுத்தக் கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது.  
 
மருந்துகளுடன் எதிர்வினையாற்றும் கிராம்பு  

நோய்களாக மருந்து சாப்பிடுபவர்களுக்கு அதிக கிராம்பு ஆபத்தானது. கிராம்பு, சில மருந்துகளுடன் வினைபுரிந்து ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. அதிகமாக கிராம்பு உட்கொண்டால், அது இரத்தப்போக்கைத் தூண்டி சிக்கலை அதிகரிக்கும்.  

மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசி வாங்குவதை நிறுத்தியது இந்திய அரசு 

மேலும் படிக்க | கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்சா என இரு நோய்களுக்கான ஒற்றைத் தடுப்பூசி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News