உங்களுக்கு சுகர் இருக்க? இந்த தப்ப மறந்து கூட பண்ணிடாதீங்க
Breakfast For Diabetes: சர்க்கரை நோய் மிக வேகமாக பரவும் ஒரு நோயாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதுபோன்ற சில தவறுகளை ஒரு போதும் செய்யக்கூடாது, அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கலாம்.
சர்க்கரை நோய்க்கான காலை உணவு: சர்க்கரை நோய் மிக வேகமாக பரவும் ஒரு நோயாகும். சர்க்கரை நோய் அதிகரிக்கும் போது, உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்நிலையில், சர்க்கரை நோயாளிகள் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கடுமையான சிறுநீரகம், இதயம் மற்றும் கண் நோய்களுக்கு வழிவகுக்கும். அதே சமயம், நமது உணவுப்பழக்கம் நம் உடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம், நீரிழிவு நோயாளிகள் இதுபோன்ற சில தவறுகளை செய்கிறார்கள், இதனால் அவர்களின் இரத்த சர்க்கரை கூடுதலாம் அதிகரிக்கிறது. ஆம், நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், காலை உணவில் சிலவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எனவே காலை உணவில் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயாளிகள் இந்த தவறுகளை செய்யக்கூடாது-
அதிக கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த புரோட்டின்: சிலர் காலை உணவில் சரிவிகித உணவை சாப்பிடுவதில்லை. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதனால்தான், குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த புரதம் கொண்ட காலை உணவிகளை மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மேலும் படிக்க | மூலநோய் உள்ளவர்கள் பால் அருந்தலாமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
காலை உணவில் புரோட்டின் ஐ அதிகளவு சேர்த்துக்கொள்ளவும்: சிலர் காலை உணவின் போது அதில் அதிக புரோட்டின் சேர்த்துக்கொண்டால் அது தீங்கு விளைவிக்கும் என்று நினைக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், காலை உணவில் முட்டை, பால், பருப்பு மற்றும் கீரையைச் சேர்த்துக் கொள்ளலாம்.
ஜூஸ் குடிப்பது: பெரும்பாலான மக்கள் காலை உணவில் ஜூஸ் குடிப்பார்கள், ஆனால் ஜூஸ்ஸில் இருந்து நார்ச்சத்து நீக்கப்படுகிறது, இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும். மறுபுறம், ஜூஸ்ஸில் கார்போஹைட்ரேட்டுகளின் அளவு அதிகமாக உள்ளது, இதன் காரணமாக இரத்த சர்க்கரை அதிகரிக்கும். அதனால் ஜூஸுக்கு பதிலாக பழங்களை சாப்பிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Herbs In Menses: மாதவிடாய் பிரச்சனைக்கு அற்புதமான தீர்வுகளைத் தரும் ஆயுர்வேதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ