அஜீரணம் மற்றும் உப்பசத்தை தவிர்க்கு வழிகள்: உணவு சாப்பிட்ட பிறகு, சிலருக்கு வயிற்றில் அசௌகரியம், உப்பசம், வாயுத் தொல்லை அல்லது வயிறு கனம் ஆகிய பிரச்சனைகள் தோன்றும். இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்கள் செரிமானம் சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும். செரிமான அமைப்பு மெதுவான வேகத்தில் வேலை செய்கிறது என்பதற்கும் பலவீனமான நிலையில் உள்ளது என்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும். சில வீட்டு மற்றும் மூலிகை வைத்தியங்கள் மூலம் செரிமான அமைப்பை சீரழிக்கும் பிரச்சனைகளிலிருந்தும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓமம் சாப்பிடுங்கள் 


சாப்பிட்ட பிறகு, ஒரு ஸ்பூனில் நான்கில் ஒரு பங்கு ஓம விதைகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு மென்று, 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். அதன் பிறகு வாயு உங்கள் உடலிலிருந்து வெளியேறும். 


சோம்பு மற்றும் சர்க்கரை மிட்டாய் சாப்பிடுங்கள்


உணவுக்குப் பிறகு செரிமானத்திற்காக சோம்பு மற்றும் சர்க்கரை மிட்டாய் சாப்பிடுவது நம் நாட்டின் பழங்கால உணவு பாரம்பரியம். ஆனால் நீங்கள் சுகர் கோடட் சோம்பை சாப்பிடக்கூடாது. பச்சை சோம்பை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அதிகப்படியான சர்க்கரை உடலுக்குள் செல்லாது. பெருஞ்சீரகம் மற்றும் சர்க்கரை மிட்டாய் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக நடந்த பிறகு, உங்கள் வயிறு மிகவும் லேசாக இருப்பதை உணரத் தொடங்குவீர்கள்.


மேலும் படிக்க | Belly Fat: தினமும் இந்த பழங்களை சாப்பிட்டா தொப்பை கொழுப்பு கரையும் 


வஜ்ராசனம் செய்யுங்கள்


உணவு உண்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் வரை வஜ்ராசனத்தில் அமர்வது உங்கள் பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வை அளிக்கும். ஆரம்பத்தில் இந்த நிலையில் உட்கார சிரமப்பட்டாலும் சில நாட்களில் பழகிவிடுவீர்கள். இந்த நிலையில் அமர்வதால் வாயு மற்றும் ஏப்பம் வந்து வயிறு லேசாக மாறும். மேலும் இது காலையில் வயிற்றை சுத்தப்படுத்த உதவுகிறது.


மெதுவாக நடக்கவும்


காலையில் செரிமானம் சரியாக இருக்கவும், வயிற்றை சரியாக சுத்தப்படுத்தவும் மிகவும் பயனுள்ள மற்றும் இயற்கையான வழி, சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 முதல் 40 நிமிடங்களுக்கு மெதுவாக நடப்பதுதான். இப்படி செய்வதால் செரிமான மண்டலம் வலுவடைந்து, உடல் ஆற்றல் அதிகரித்து, வயிற்று உப்புசம் பிரச்னை இருக்காது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இத பண்ணுங்க போதும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ