Belly Fat: தினமும் இந்த பழங்களை சாப்பிட்டா தொப்பை கொழுப்பு கரையும்

Belly Fat: உங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 2, 2022, 04:16 PM IST
  • தொப்பையை குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்
  • சரியான உணவுமுறையை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • உணவில் சில பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்
Belly Fat: தினமும் இந்த பழங்களை சாப்பிட்டா தொப்பை கொழுப்பு கரையும் title=

தொப்பை கொழுப்பைக் குறைக்கும் பழங்கள்: பலர் உடல் எடையைக் குறைக்க குறைவான உணவை உண்கின்றனர் அல்லது பசியுடன் இருப்பதன் மூலம் விரைவாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கின்றனர். இந்த வழியில் நீங்கள் உங்கள் எடையை குறைக்கலாம், ஆனால் குறைவாக சாப்பிடுவது அல்லது பசியுடன் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். சரியான உணவுமுறையை எடுத்துக் கொள்ளாததால், உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது, அதனால் உங்கள் உடல் பலவீனமடையும். அதுமட்டுமின்றி உங்கள் உடலின் எலும்புகளும் பலவீனமடையும். எனவே உங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். எனவே உங்கள் உணவில் எந்தெந்த பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

தொப்பையை குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்

கிவி: உடல் எடையை குறைக்கும் உணவுகளில் ஒன்று கிவி பழம் ஆகும். ஏனெனில் கிவியில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கிவி விதைகள் செரிமானத்திற்கும் உதவுகிறது. அதே நேரத்தில், கிவியின் பச்சைப் பகுதியில் கரையக்கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும். மறுபுறம், நீங்கள் இனிப்பு சாப்பிட விரும்பினால், அதற்கு பதிலாக கிவி பழத்தை சாப்பிடலாம்.

மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது

ஆப்பிள்: தொப்பையை குறைக்க ஆப்பிள் பழம் உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால், ஆப்பிளில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது உங்கள் செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்க உதவுவதோடு எடையைக் குறைக்கவும் உதவும். அதுமட்டுமின்றி தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் நோய்களில் இருந்தும் விலகி இருக்கலாம், மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. 

பப்பாளி: பப்பாளி சாப்பிடுவது எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. பப்பாளியில் நல்ல அளவு நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமின்றி இது சரியான செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் கோலைன் இருக்கிறது. அதோடு இதிலிருக்கும் பி விட்டமின்கள் அடிவயிற்றில் சேர்ந்திருக்கக்கூடிய கொழுப்பைக் கரைத்திடும். மதுப்பழக்கம் உடையவர்களுக்கு கல்லீரலைச் சுற்றி கொழுப்பு படிந்திருக்கும் அதனை கரைக்கவும் வாழைப்பழம் பயன்படும்.

மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News