முளைகட்டிய பச்சைப்பயிறு... காலையில் சாப்பிடுங்க அபூர்வ பலன்கள் நிச்சயம்
Best Morning Foods | தினமும் காலையில் முளை கட்டிய பச்சைப் பயிறு சாப்பிட்டால் ஆறு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
முளைக்கட்டிய பயிரில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. அவற்றை உங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது ஆரோக்கியம் அளவில்லா நன்மைகள் கிடைக்கும். ஒரு மாதம் தினசரி உணவில் முளைக்கட்டிய பயிறை சாப்பிட்டால் ஆறு அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. என்னென்ன ஆற்றல் எல்லாம் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
செரிமானம் மேம்படும்
முளை கட்டிய பயிரில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இவை செரிமான அமைப்பை பலப்படுத்தும். தினமும் காலையில் இதனை உட்கொள்வதால் மலச்சிக்கல், வாயு மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது உடலின் நல்ல பாக்டீரியாக்களை பராமரிக்கிறது. மலச்சிக்கல் இல்லையென்றாலே நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் முளைக்கட்டிய பயிறை சாப்பிடுவது நல்லது. குடல் இயக்கமும் மேம்பட்டு, வயிறு தொடர்பான பிரச்சனைகளும் உங்களுக்கு முடிவுக்கு வரும்.
மேலும் படிக்க | தக்காளி சூப்பர்புட் தான்... ஆனால் இந்த பிரச்சனை இருக்கிறவங்க தவிர்ப்பது நல்லது
எடை இழப்பு
உடல் எடையை குறைக்க என்னென்ன முயற்சிகளையோ எல்லோரும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி இருந்தாலே உடல் எடையை குறைத்துவிடலாம். குறுக்கு வழியில் சென்று உடல் எடையை குறைக்க முயற்சிக்காதீர்கள். சமச்சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். அதில் குறிப்பாக முளைக்கட்டி பயிரை சாப்பிடுங்கள். அவை குறைந்த கலோரிகள் இருப்பதுடன் நார்ச்சத்து மிக்கதாக இருப்பதால் பசியை கட்டுப்படுத்தும். இதனால் அதிகம் சாப்பிடுவதை இயல்பாகவே தவிர்த்துவிடுவீர்கள். ஆற்றலும் நாள் முழுவதும் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
முளைகட்டிய பயிரில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுவும் தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய காலத்தில் இருப்பதால் முளைகட்டிய பயிறு அவற்றில் இருந்து உங்களை பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் பலவீனமாக இருப்பவர்கள் முளைகட்டிய பயிரை சாப்பிடுங்கள். இதற்கான மூலதன செலவு மிக மிக குறைவு. ஆனால் இதனால் கிடைக்கக்கூடிய பலன் அபரிமிதமானது.
தோல் மற்றும் முடிக்கு நன்மை
முளைகட்டிய பயிரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. இவை சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றும். இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி முடி வளர்ச்சியை அதிகரித்து, அவற்றை வலிமையாக்கும். தோல் ஆரோக்கியமும் மேம்படும். பூஞ்சை பிரச்சனை இருப்பவர்கள் இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது இயற்கையாகவே இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இதய ஆரோக்கியம்
முளை கட்டிய பயிர்களில் நல்ல அளவு பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதய நரம்புகளில் அடைப்பைத் தடுக்கிறது. இது இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.
சர்க்கரை அளவு கட்டுப்பாடு
முளைகட்டிய பயிரில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு அதன் நுகர்வு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, ஏனெனில் இது சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதை தடுக்கிறது. எனவே, இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு முளைகட்டிய பயிரை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது குறித்து முடிவெடுக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கருவளையங்களை மாயமாய் மறைய செய்யும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ