இந்த 5 விஷயங்களை செஞ்சா உடல் எடை குறையாது... வதந்திகளை நம்ப வேண்டாம்!
Weight Loss Myths: உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் இந்த 5 வதந்திகளை நம்பக்கூடாது. இந்த வதந்திகளால் ஏற்படும் பின்விளைவுகளை இங்கு காணலாம்.
Weight Loss Myths: உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், இரவில் சரியான நேரத்தில் தூங்காதது, காலையில் நீண்ட நேரம் தூங்குவது, குறைவான உடல் இயக்கம், சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
குறிப்பாக, வயதானோரிடம் மட்டுமில்லை, பதின் பருவத்தினரிடமும், இளைஞர்களிடமும் உடல் பருமன் பெரும் பிரச்னையாக இருக்கிறது. உடல் பருமன் பிரச்னை சிலருக்கு மன அழுத்தத்தை கொடுக்கலாம், அவர்களின் தன்னம்பிக்கையையும் கெடுக்கலாம்.
5 வதந்திகள்
அப்படியிருக்க தற்போது பலரும் உடல் எடை குறைப்பில் தீவிரம் காட்டுவதையும் பார்க்க முடிகிறது. அதற்காக, தீவிரமான டயட் செயல்முறைகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட விஷயங்களை செய்கிறார்கள். இருப்பினும் பலரும் மருத்துவ ஆலோசனை எதுவுமின்றி தன்னிச்சையாக முடிவெடுத்து உடல் எடை குறைப்பில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், இது தவறாகும். நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அப்படியிருக்க உடல் எடை குறைப்பில் ஈடுபடும்போது பலரும் இந்த 5 உண்மையற்ற தகவல்களை நம்புகின்றனர். அந்த 5 விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | அடிக்கடி சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இதை தெரிஞ்சுக்கோங்க!
கார்ப்போஹைட்ரேட் உடலுக்கு நல்லது இல்லையா?
பலரும் உடல் எடை குறைப்பில் இருக்கும்போது கார்ப்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், இது வெறும் வதந்தி ஆகும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகளில் பதப்படுத்தப்படாத கார்ப்போஹைட்ரேட் உள்ளன.
இவற்றில் நார்ச்சத்து, வைட்டமிண்கள், கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. மேலும், கார்ப்போஹைட்ரேட் உங்களுக்கு ஆற்றலை அளிக்கும், வயிறு நிறைவை கொடுக்கும். இதன்மூலம் உடல் எடை குறைப்பில் கார்ப்போஹைட்ரேட்டும் பலன் கொடுக்கும்.
குறைவாக சாப்பிடுவது நல்லதா?
உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம். ஆனால், குறைவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என நினைப்பது தவறான புரிதல் ஆகும். இதனால் குறுகிய காலத்தில் உடல் எடை குறையலாம். ஆனால், நீண்ட கால அளவில் பார்த்தோமானால் இது உடல்நலத்திற்கு கேடானது. குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம், வளர்ச்சிதை மாற்றம் குறையும், இதனால் முறையற்ற உணவுப் பழக்கம் ஏற்படும். உடல் எடை மீண்டும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இதில் உள்ளது.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு.... இந்த தவறுகளை ஒரு போதும் செய்யாதீங்க
உடற்பயிற்சி மட்டும் போதுமா?
பலரும் உடற்பயிற்சியை செய்தாலே உடல் எடை குறைந்துவிடும் என நினைக்கிறேன்றனர். இதுவும் வதந்திதான். தொடர்ச்சியான உடல் இயக்கம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தேவையானது. ஆனால் அது உடல் எடை குறைப்பில் பெரிதும் பயன் அளிக்காது. சமர்சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பழக்கவழக்கத்துடன், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி உடல்பயிற்சியிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே உடல் எடை அதிகரிக்கும்.
சாப்பிடாமல் இருப்பது நல்லதா?
ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் மட்டும் சாப்பிடுவது, ஒரு வேளை மட்டும் சாப்பிடுவது ஆகியவை உடல் எடை குறைப்பில் அதிகம் பயனளிக்கும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், இதுவும் வதந்திதான். இப்படி சாப்பிடாமல் இருப்பதன் மூலம் நீங்கள் அதிகம் சாப்பிடுவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் இதனால் வளர்ச்சிதை மாற்றம் குறைவாகலாம், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
அனைத்தும் கொழுப்புகளும் கெட்டதா?
அனைத்து கொழுப்புகளும் உடல் எடையை அதிகரிக்கும் என்பதும் வதந்திதான். நெய், அவகாடோ, நட்ஸ் ஆகியவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன. இது ஹோர்மோன்களை சீராக்க உதவும். மேலும் இவை மூளை இயக்கத்திற்கும் நல்லது, வைட்டமிண்களை உறிஞ்சுவும் உதவும். இது உடல் எடை குறைப்பிலும் கைக்கொடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | இந்த பழங்களின் சாறு உடலுக்கு நல்லது இல்லை! தவிர்ப்பது நல்லது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ