மாதம் அல்லது வாரம் ஒருமுறை சிக்கன் சாப்பிடும் பழக்கம் மறைந்து தற்போது அடிக்கடி சிக்கன் சாப்பிடுகிறோம். இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சிக்கன் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இது உங்கள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
மனிதர்களுக்கு தினசரி புரத உட்கொள்ளலில் 10% - 35% தேவைப்படுகிறது. சிக்கன் அதிக அளவு புரதச்சத்து நிறைந்த உணவு என்பதால், அடிக்கடி சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
சிக்கன் அடிக்கடி சாப்பிடுபவர்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு (UTIs) அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிக்கனில் அதிகம் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இதன் விளைவாக, கீல்வாதம் மற்றும் சிறுநீரக நோய் ஏற்படலாம்.
அதிகளவு புரதம் நிறைந்த உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்து கொள்ளும். இது உடலின் தெர்மோஜெனிக் விளைவுக்கு வழிவகுத்து உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது.