உடல் எடையை குறைக்க காலையில் எழுந்ததும் இத மட்டும் பண்ணுங்க!

உடல் எடையை குறைப்பது கடினமான ஒன்று. இருப்பினும் காலையில் நாம் செய்யும் சில பழக்கங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

2 /6

காலையில் முட்டை அல்லது புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது பசியை குறைத்து அதிகம் சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது.

3 /6

காலையில் எழுந்ததும் 20 முதல் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைகிறது, மேலும் நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க முடியும்.

4 /6

காலையில் சக்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.

5 /6

காலையில் முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வது நல்லது. இது அதிகமாக சாப்பிடும் ஆசையை குறைக்கிறது. சீரான உடலுக்கு உதவுகிறது.  

6 /6

அதே போல இரவு சரியான தூக்கமும் முக்கியம். தூக்கமின்மை உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.