மறந்து கூட பிரிஞ்சி இலையை இவர்கள் சாப்பிடக்கூடாது
Harm to health of bay leaves: பிரிஞ்சி இலைகள் உணவின் சுவையை அதிகரிக்கும், ஆனால் சிலருக்கு இது தீங்கு விளைவிக்கும். எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உணவின் சுவையை அதிகரிக்க மக்கள் பல்வேறு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த மசாலாப் பொருட்களில் ஒன்று பிரிஞ்சி இலையாகும், அதன் வாசனை மிகவும் வலுவானது. பொதுவாக ஒன்று அல்லது இரண்டு பிரிஞ்சி இலைகள் மட்டுமே பல வகையான காய்கறிகளில் சேர்க்கப்படும், அது முழு உணவின் சுவையை அதிகரிக்கிறது. இதுமட்டுமின்றி வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தயாமின், ஃபோலேட், இரும்பு, சோடியம், துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்கள் இதில் காணப்படுகின்றன. இதன் காரணமாக இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையாக்கும். ஆனால் இந்த இலை எல்லோரும் நன்மையை செய்யாது. ஆம், இது சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது, எனவே இது சிலருக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த நபர்கள் தங்கள் உணவில் பிரிஞ்சி இலைகளை சேர்க்கக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
இவர்கள் தங்களின் உணவில் பிரிஞ்சி இலையை சேர்க்கக்கூடாது-
தொண்டை பிரச்சனை
பிரிஞ்சி இலைகள் உங்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ளலாம் அல்லது உங்கள் தொண்டையில் வலியை ஏற்படுத்தலாம். எனவே, உங்களுக்கு ஏற்கனவே வலி, தொண்டை வீக்கம் இருந்தால், நீங்கள் பிரிஞ்சி இலையை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டாம்
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் உடலின் சர்க்கரை அளவு குறையும். எனவே அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பிரிஞ்சி இலைகளை சாப்பிடக்கூடாது. ஏனென்றால், சர்க்கரை நோயாளிகள் இதை உட்கொண்டால், அவர்களின் பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டாம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒருபோதும் பிரிஞ்சி இலைகளை உட்கொள்ளக்கூடாது. பிரிஞ்சி இலைகளின் விளைவு சூடாக இருக்கிறது, அத்தகைய சூழ்நிலையில், கர்ப்ப காலத்தில் இந்த இலைகளை உட்கொண்டால், அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும், எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் பிரிஞ்சி இலைகளை சாப்பிடக்கூடாது.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR