டீ குடிக்கும்போது இதை மட்டும் சாப்பிடவே கூடாது
உலகளவில் பலரும் தேநீரை விரும்பி அருந்துகின்றனர், இது பலருக்கும் களைப்பை நீக்கி சுறுசுறுப்பு தரும் ஒரு அற்புத பானமாக செயல்படுகிறது.
ஒரு நாள் முழுக்க ஒரு கோப்பை அளவு கூட தேநீர் அருந்தாமல் இருப்பதாக நினைத்து பார்க்க சொன்னால் கூட தேநீர் பிரியர்களால் நினைத்து பார்க்கக்கூட முடியாது. அந்த அளவுக்கு தேநீருக்கென்று பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது, பல பேச்சிலர்களுக்கு தேநீர் தான் உணவாகவே இருக்கிறது. எவ்வளவு களைப்பாக இருந்தாலும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அவ்வளவு களைப்பு போயி சுறுசுறுப்பாக மாறுவதாக தேநீர் பிரியர்கள் கூறுகின்றனர். உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படும் ஒரு அற்புதமான பானம் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அதற்கு பதில் தேநீர் தான் என்று சொல்லலாம். பால், சர்க்கரை, தேயிலை தூள் கலந்த ஒரு ஆரோக்கியமான பேக்காக தேநீர் நமக்கு கிடைக்கிறது. அட்ரக் வாலி , காலி மிர்ச், மசாலா போன்ற பல தேநீர் வகை உள்ளது, பொதுவாக தேநீர்கள் இந்தியர்களை ஒருங்கிணைப்பதாக கூறப்படுகிறது, தற்போது இதனை வெளிநாடுகளிலும் விரும்ப தொடங்கிவிட்டனர்.
மேலும் படிக்க | உங்க கிட்னில பிரச்சனையா, இந்த உணவுகள ஒருபோதும் சாப்பிடவே கூடாது
தேநீரில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளது, இது கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. மாலை நேரத்தில் அருந்தும் தேநீருடன் சிறிது சிற்றுண்டி சேர்த்து அருந்தினால் கூடுதல் இன்பமாக இருக்கும், ஆனால் தேநீருடன் சில சிற்றுண்டிகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கை விளைவிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது தேநீருடன் எந்த வகையான சிற்றுண்டிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது குறித்து இங்கே காண்போம்.
பல இந்திய குடும்பங்களில் வீட்டிற்கு உறவினர்கள் யாரேனும் வந்தால் தேநீருடன் சில வகையான சிற்றுண்டிகளை சேர்த்து கொடுப்பது வழக்கம். அவ்வாறு வழங்கப்படும் சிற்றுண்டிகள் பெரும்பாலும் கடலை மாவு போன்றவற்றால் செய்தவையாக தான் இருக்கும், இதுபோன்ற மாவுகளில் செய்த பக்கோடா போன்ற சில சுற்றுண்டில்களை தேநீருடன் சேர்த்து சாப்பிடும்போது அஜீரண கோளாறு ஏற்படுகிறது. அடுத்ததாக தேநீர் அருந்தும்போது அதனுடன் பச்சை காய்கறிகளை சேர்த்து உண்ணக்கூடாது. வெறுமனே பச்சை காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நன்மையளிக்கும், ஆனால் தேநீருடன் சேர்த்து சாப்பிடும்பொழுது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது.
பலருக்கும் லெமன் டீ என்றால் பிடிக்கும், டயட்டில் இருப்பவர்கள் கூட இந்த லெமன் கலந்த தேநீரை பருகுவார்கள். ஆனால் இந்த லெமன் தேயிலையுடன் கலக்கும்பொழுது அமிலமாக மாறி வயிறு சம்மந்தமான கோளாறை ஏற்படுத்துகிறது. மேலும் மஞ்சள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை தேநீர் அருந்தும்போது உட்கொள்ளக்கூடாது. அது அமிலத்தன்மையை அதிகரிக்க செய்து செரிமான கோளாறுகளை உண்டுபண்ணுகிறது. அதேபோல பாலுடன் இரும்பு சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்வது அவ்வளவு நல்லதல்ல. தேநீருடன் நட்ஸ் வகைகளை உண்ணுவது உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும், தேநீரில் உள்ள டானின் என்கிற பொருள் நட்ஸ்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை தடுக்கிறது.
மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்த பின்னர் இதை மட்டும் செய்யாதீங்க: பல பிரச்சனைகள் வரலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR