புதுடெல்லி: வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும், வாழ வேண்டும் என்ற உந்துதலுக்கும் அடிப்படையாக அமைவது குடும்பம். குடும்பம் என்றால் பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் தான் குடும்பத்தின் குதூகலத்திற்கு ஆணிவேராக இருக்கின்றனர். வாழ்க்கைக்கான பிடிப்பாகவும் இருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மாறிய வாழ்க்கை முறையும், படித்து வேலையில் நிரந்தமரான பிறகு தான் திருமணம் என்ற நிலையில் கால தாமதமாக திருமணம் நடைபெறுவதால், கறுவுறுதலில் பலர் பிரச்சனைகளை சந்திக்கின்றர். எனவே தற்போது செயற்கை கருவுறுதல் தீர்வுகள் பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றன.


மிகவும் முக்கியமான இந்த விஷயத்தில் கருவுறுதல் சிகிச்சை தொடர்பாக பல கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அவற்றின் உண்மையை தெரிந்துக் கொள்ளவேண்டும். செயற்கை கருதரிக்கும் முறைகளில் ஐவிஎஃப் (IVF) மிகவும் முக்கியமான ஒன்று. இன்-விட்ரோ (Invitro fertilization) என்பதையே ஐ.வி.எஃப் என்று சுருக்கமாக அழைக்கிறோம். இயற்கையாக கருத்தரிக்க முடியாத பெண்கள், குழந்தை பெற வேண்டும் என்ற கனவை நனவாக்குகிறது ஐவிஎஃப்.  


Read Also | குடும்பக் கட்டுப்பாடு, குழந்தை பிறப்பை திட்டமிடுவதன் அடிப்படை விஷயங்கள்


ஐ.வி.எஃப், ஐ.யு.ஐ போன்ற இனப்பெருக்க நுட்பங்கள் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சிறந்த கருவிகள் காரணமாக நிறைய மாற்றங்களை உருவாகியுள்ளன. மலட்டுத்தன்மையுள்ள தம்பதிகளின் கனவை நிறைவேற்றியுள்ளது செயற்கை கருதரித்தல் சிகிச்சைகள். 


இன்விட்ரோ கருத்தரித்தல் முறையில் நோயாளியின் வயதும் முக்கியமானது.எப்போது வேண்டுமானாலும் ஐவிஎஃப் சிகிச்சையைப் பெற முடியும் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது உண்மையல்ல. ஒரு வெற்றிகரமான ஐவிஎஃப்-க்கு, சிகிச்சை வயது என்பது ஒரு பெரிய காரணியாகும். வயது அதிகமாகும்போது கருத்தரிக்கும் திறன் குறைகிறது, எனவே ஒரு ஐவிஎஃப் வெற்றி விகிதமும் குறைகிறது.


ஐவிஎஃப் வலிமிகுந்ததாக இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. ஐவிஎஃப் நடைமுறையில் ஊசி மூலம் போடக்கூடிய மருந்துகள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பேனாவால் (technologically advanced pen) நிர்வகிக்கப்படுகின்றன,


Also Read | புத்திர பாக்கியம் இல்லையா; குழந்தை செல்வத்தை அருளும் திருவாலங்காடு


இந்த முறையில் மருந்தை உட் செலுத்தும்போது நோயாளிக்கு வலியே இருக்காது. நோயாளி மயக்க நிலையில் இருக்கும்போது அவர்கள் கருப்பையி இருந்து முட்டை எடுக்கும் செயல்முறை செய்யப்படுகிறது. எனவே ஐவிஎஃப் முறையில் பெண்களுக்கு வலி இருக்காது.  


ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும் என்றும் பலர் நம்புகின்றனர். இது ஒரு கட்டுக்கதை. லட்சக்கணக்கான குழந்தைகள் ஐவிஎஃப் மூலம் பிறந்திருக்கிறார்கள், அவர்கள் இயல்பாகவும், இயற்கையான முறையில் கருதரித்து பிறந்த குழந்தைகளைப் போலவே இருக்கின்றனர். 


ஐவிஎஃப் முறையில் கர்ப்பம் தரித்தால், கர்ப்ப காலம் முழுவதும் படுக்கையிலேயே ஓய்வு எடுக்கவேண்டும்.: இது உண்மையல்ல. ஒரு ஐ.வி.எஃப் சிகிச்சையின்போதும், கருதரித்த பிறகும் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே, இந்த முறையில் கருத்தரித்த பெண்கள் வழக்கம்போலவே வேலை செய்யலாம், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என்றால் அலுவலகத்திற்கும் செல்லலாம், இயற்கையாக கருதரித்த பெண்ணைப் போலவே இயல்பான வாழ்க்கையை வாழலாம். 


Also Read | உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும் அறிவாளியாகவும் வளர வேண்டுமா? இதோ அதற்கான tips!!


பருமனான பெண்களுக்கு ஐவிஎஃப் மூலம் குழந்தை பிறக்காது என்றும் கட்டுக்கதை உலாவுகிறது. உடல் பருமன் எல்லாவிதத்திலும் சிக்கலை கொடுக்கும். வேறு எந்தவொரு சிகிச்சையைப் போல தான் ஐ.வி.எஃப்மும். எனவே, உடல் பருமன் பெரிய அளவில் ஐ.வி.எஃப் சிகிச்சையில் தடையை ஏற்படுத்தாது.


ஐவிஎஃப் மூலம் கருதரிப்பதற்கு அதிக செலவாகும் என்றும் பலர் நினைக்கின்றனர். தொழில்நுட்ப முன்னேற்றம் முன்பை விட மிகவும் எளிதாக்கியுள்ளதால், பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட ஐவிஎஃப் மூலம் கருதரிப்பதற்கான செலவு பல மடங்கு குறைந்துள்ளது. IVF சிகிசைக்கான குறைந்தபட்ச செலவு 1 லட்சம் முதல் 1.5 / 2 லட்சம் வரை தான் ஆகும். 


எந்தவொரு விஷயத்தை பற்றிய தவறான நம்பிக்கைகளே, அந்த பாதையில் செல்லவிடாமல் முட்டுக்கட்டையாகிறது. கட்டுக்கதைகளை நம்பாமல், தீர விசாரித்து தெரிந்துக் கொண்டால் வாழ்க்கையில் முட்டுக்கட்டையே இருக்காது.


 Also Read | 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்த பெண் கீழே விழுந்து மரணம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR