பொதுவாக பால் புரதத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது, புரதசத்து நிறைந்த பருப்பு வகைகளை விட பாலில் அதிக புரதசத்து இருக்கிறது.  அசைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சி, முட்டை போன்றவற்றிலிருந்து புரதசத்து கிடைத்துவிடும், சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த புரத மையமாக விளங்குவது பால் தான்.  நமது ஆரோக்கிய மேம்பாட்டிற்காக தினமும் குடிக்கும் பாலில் படுக்கையில் கிடக்கும் நோயாளியை கூட சரிசெய்யும் அளவிற்கு திறன் உள்ளது.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பெரும்பாலானவர்களுக்கு பால் தான் கொடுக்கப்படுகிறது.  ஆனால் அதே சமயம் சிலருக்கு பால் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது, லாக்டோஸ் ஒவ்வாமை அல்லது வயிறுக் கோளாறு இருப்பவர்கள் பாலை தவிர்க்கலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பளபளக்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கு 5 உணவுகள் செய்யும் மாயம்


லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் பால் மற்றும் பன்னீர் போன்ற பால் பொருட்களை சாப்பிட்டவுடன் வயிற்றுப்போக்கு, வீக்கம் அல்லது அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.  ஆனால் லாக்டிக் அமிலம் கலந்துள்ள தயிர் அல்லது மோர் சாப்பிடும்போது அவர்களுக்கு இதுபோன்ற ஒவ்வாமைகள் ஏற்படாது.  பால் சாப்பிடும்போது வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படுமாயின் அவர்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை மேற்கொள்ளலாம்.  அதிகப்படியான நன்மைகளை பெற A2 பால் தான் குடிக்க வேண்டும் என்பது கிடையாது, பசு அல்லது எருமை பாலில் அதிகளவு சத்துக்கள் உள்ளது, எருமைப்பாலை விட பசும்பாலில் கொழுப்பு குறைவாக உள்ளது சில சமயம் கிடைக்கும் குறைந்த கொழுப்புள்ள எருமைப்பாலையும் குடிக்கலாம்.



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என நினைந்து அதனை குடிக்காமல் தவிர்த்துவிடுவார்கள் ஆனால் அது ஒரு தவறான செயலாகும்.  உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அவர்களது டயட்டில் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கிளாஸ் குறைந்த அளவு கொழுப்புள்ள பாலை குடிக்க வேண்டும்.  பால் குடிப்பது சில சமயங்களில் புற்றுநோய் அல்லது நீர்க்கட்டிகள் அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் என்று சில வதந்திகள் உள்ளன, ஆனால் இவை அந்த அளவுக்கு உண்மையில்லை. உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் மட்டுமே பாலை தவிர்த்துவிடுங்கள் மற்றபடி நீங்கள் தயங்காமல் பால் அருந்தலாம்.


மேலும் படிக்க | பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்கும் சுலபமான வழி.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ