வாஷிங்டன்: கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயால் உலகமே ஆடிப்போயிருக்கிறது. பாதிப்பு நிலவரத்தில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. பலி எண்ணிக்கையும் அதிக அளவில் இருந்தாலும், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்தும் விரைவில் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என விரும்புகிறார். பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாவிட்டால், அரசின் நிதியுதவி குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் தற்போது பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படாவிட்டால், பள்ளிகளுக்குக் கொடுக்கப்படும் Federal funding எனப்படும் நிதி குறைக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். பள்ளிகளை மீண்டும் விரைவில் திறக்க பள்ளி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் இதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.


பிற நாடுகளை உதாரணம் காட்டும் Donald Trump  


'ஜெர்மனி, டென்மார்க், நோர்வே, சுவீடன் மற்றும் பல நாடுகளில் உள்ள பள்ளிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் திறக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக பள்ளிகள் திறந்தால் அது அவர்களுக்கு அரசியல் ரீதியாக மோசமாக இருக்கும் என்று ஜனநாயக கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர், ஆனால் பள்ளிகள் திறக்கப்படுவது குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் முக்கியமானது' என்று அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Read Also | கொரோனாவில் இருந்து விலக்கு கிடைத்தாலும், விலங்குகளைக் கண்டு நடுங்கும் பக்தர்கள்


வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக விமர்சனம்


நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் வழிகாட்டுதல்களையும் டொனால்ட் டிரம்ப் விமர்சித்தார். அவர் தனது ட்வீட்டில், “பள்ளிகளை மீண்டும் திறக்க Center for Disease Control and Prevention தயாரித்த வழிகாட்டுதல்களை நான் முற்றிலும் ஏற்கவில்லை. அவர்கள் (மையங்கள்) பள்ளிகளைத் திறக்க அனுமதி கொடுத்தாலும், பள்ளிகளிடம் இருந்து அவர்கள் கோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது சாத்தியமற்றது. இது தொடர்பாக நான் அவர்களை சந்தித்துப் பேசுவேன்' என்று தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்காவில் மாபெரும் கோரதாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில் டிரம்பின் இந்த எச்சரிக்கை அனைவருகுகும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  
கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அந்நாட்டு அதிபர் போல்சோனாரோ, மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.   


Also Read | கொரோனா காலத்திலும் பயங்கரவாதமா? ஐ.நா-வில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!!


மக்கள் லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கி விட்டால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பொருளாதார முடக்கம் ஏற்படும் என்று கூறினார். அதுமட்டுமல்ல, பொது மக்கள் வெளியே வந்து பொருளாதார நடவடிக்கையில் சுதந்திரமாக ஈடுபட வேண்டும் என்று பிரேசில் அதிபர் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.  
அதுமட்டுமல்ல, கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான், எனவே அச்சப்படத் தேவையில்லை என வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.


அதுமட்டுமல்ல அவர் முகக்கவசம் அணிய மறுத்து வழக்கம் போலவே நடமாடியது பரவலான விமர்சனங்களையும் எழுப்பியது.  இந்த நிலையில், பிரேசில் அதிபர்  போல்சோனாரோவுக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.


இதுபோன்ற நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் அதிரடியான கருத்தும், பள்ளிகளுக்கு அவர் விடுத்திருக்கும் எச்சரிக்கையும் சர்வதேச அளவில் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. வழக்கம் போல இயல்பான நடவடிக்கைகளுக்கு மக்கள் திரும்பிவிட வேண்டும் என்பதே அவரது விருப்பம்  ஆனால் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு இன்னமும் மட்டுப்படவில்லை என்று வல்லுநர்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளனர்.  தற்போது அவசர கோலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கிவிடலாம் என்று மருத்துவத் துறையினர் அஞ்சுகின்றனர். ஆனால் டிரம்ப் எதையும் கேட்க விரும்பவில்லை.