கொலஸ்ட்ரால் vs காபி: பெரும்பாலான மக்கள் தேநீர் அல்லது காபியுடன் தங்கள் நாளைத் தொடங்க விரும்புகிறார்கள். இவை மிகவும் பிடித்த மற்றும் பிரபலமான காலை பானங்கள் ஆகும். சிலருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும், அத்தகையவர்கள் எப்போதும் காபி குடித்துக்கொண்டே இருப்பார்கள். எனினும் காபியை வரம்பிற்குள் உட்கொண்டால் மட்டுமே நமது ஆரோக்கியத்திற்கு சில நன்மைகள் கிடைக்கும். இருப்பினும் காபி குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்பார்கள். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும், மேலும் காபி கெட்ட கொழுப்பின் அளவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இன்டெஉ தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காபி மற்றும் கொலஸ்ட்ரால்
காபி குடிப்பதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீங்கள் எவ்வளவு காபி குடிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. மற்றொரு சிறப்பு என்னவென்றால், காபி பெண்கள் மற்றும் ஆண்களின் கொலஸ்ட்ரால் அளவை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. ஆம், 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, காபியை அதிகமாக உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | எச்சரிக்கை! ஆண்களை அதிகம் பாதிக்கும் வயிற்று புற்றுநோய்! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?


எந்த காபி தீங்கு விளைவிக்கும்
தி இன்ஸ்டிடியூட் ஃபார் சயின்டிஃபிக் இன்ஃபர்மேஷன் ஆஃப் காபி (ISIC) படி, காபியில் காணப்படும் டைடர்பீன் காரணமாக கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. 2011 ஆம் ஆண்டு ஆய்வின்படி, ஸ்கைண்டிநேவியா பைல்ட் காபி, ஃப்ரெஞ்ச் பிரெஸ் காபி, துர்க்கி காபி போன்றவற்றை குறைவாக உட்கொள்ள வேண்டும். இந்த காபிகள் கொலஸ்ட்ரால் அளவை மிகவும் பாதிக்கின்றன. அதே நேரத்தில், எஸ்பிரெசோ, ஃபில்டர் காபி மற்றும் இன்ஸ்டெண்ட் காபி ஆகியவற்றில் டிடர்பின் மிகச் சிறிய அளவில் காணப்படுகிறது, இது கொலஸ்ட்ரால் அளவில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.


கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் வழிகள்
* ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும்
* தினமும் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்
* நீண்ட நேரம் உட்காருவதை தவிர்க்கவும்
* ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உண்ணுங்கள்
* அதிகளவில் காபி குடிக்க வேண்டாம்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அதிகமாக உப்பை சாப்பிட்டால் உண்டாகும் பிரச்னைகள்... ரொம்ப கவனமா இருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ