உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடலில் நீர் சத்து  இருப்பது மிகவும் முக்கியம். நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். தண்ணீர் பற்றாக்குறையால் தலைவலி, மலச்சிக்கல், தோல் வறட்சி, மூட்டு வலி, அஜீரணம், குறைந்த ரத்த அழுத்தம், உடல் பருமன் பிரச்னை, மார்பகப் புற்றுநோய் போன்ற பல பிரச்னைகள் வரலாம். நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று தண்ணீர். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர் சத்து குறைபாடு அனைத்து வகையான நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடும். நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறிதளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்


உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித உடலில் உள்ள நீரின் அளவு 50-60 சதவீதம். நீர் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலின் நச்சுக்களை வெளியேற்றுவது முதல், உடல் எடையை குறைப்பது முதல் எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை கொடுக்கிறது.


1. உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்
 
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உடல் உள் உறுப்புகள் சுத்தமடைந்து, உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். இதனால் உடல் புத்துணர்வு பெறும். 


மேலும் படிக்க | Bone Health: எலும்புகளை வலுவாக்கும் ‘சூப்பர்’ ஜூஸ்கள்!


2. எடையை குறைக்கும் பானம்


தண்ணீர் குடிப்பதால் பசி குறைகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும். இதனால், செரிமான அமைப்பை மேம்படுத்தி எடையைக் குறைக்க உதவுகிறது.


3. உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்கும்


நீங்கள் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால், தண்ணீர் குடிப்பது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் நீரிழப்பு காரணமாக, சோர்வு ஏற்படுகிறது. சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலுக்கும் ஆற்றல் கிடைக்கும்.


4. மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்


நீங்கள் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால், தண்ணீரை அருந்த வேண்டும். மூளை திசுக்களில் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. நீரிழப்பு காரணமாக, உடலுடன் சேர்ந்து, மூளையும் மன அழுத்தத்தை உணர்கிறது. எனவே, அவ்வப்போது தண்ணீர் குடிப்பதன் மூலம், டென்ஷனைக் குறைக்கலாம்.


மேலும் படிக்க | Health Alert: அளவிற்கு மிஞ்சிய புரதம் ‘விஷம்’; எச்சரிக்கும் நிபுணர்கள்!


5. கூந்தலின் அழகை அதிகரிக்கும்


நீர் சத்து பற்றாக்குறையால், முடி மெல்லியதாகவும், உடையக்கூடியதாகவும் மாறத் தொடங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீர் சத்து பற்றாக்குறை கூட முடியின் வறட்சி மற்றும் உயிரற்ற தன்மைக்கு காரணம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது முடியின் வறட்சியைப் போக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.


6. செரிமான அமைப்பு வலுவடையும்


வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதம், அதாவது மெட்டபாலிஸம் அதிகரிக்கும். இதன் காரணமாக உங்கள் செரிமான அமைப்பு சிறப்பாக இருக்கும். மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.


காலையிலும் மாலையிலும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?


காலையில் எழுந்தவுடன் உடனடியாக குறைந்தது 3 டம்ளர் குடிக்க வேண்டும். நீங்கள் தினமும் இந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். தண்ணீர் குடித்த 45 நிமிடங்களுக்குப் பிறகு காலை உணவை உட்கொள்ள வேண்டும். அதற்கு முன்தாக வேறு எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க |  Lungs Health: சுவாசத்திற்கு ஆதாரமான ‘நுரையீரல்’ வலுப்பெற செய்ய வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ