பல் வலி ஏற்படும் போது பெரும்பாலானோர் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். அப்போதைக்கு சரியானாலும், சிலருக்கு அடிக்கடி பல் வலி ஏற்படும்.  அதே போல்  தலைமுடி மிக அதிகமாக உதிரும். என்ன செய்தாலும் பிரச்சனை தீராது. அதே போல் தசைகளில் அடிக்கடி  வலி ஏற்படலாம். அது போன்ற பிரச்சனைகள் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் இந்த அறிகுறிகள் அனைத்தும் உடலில் வைட்டமின் டி குறைபாடு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்


எலும்பு மற்றும் முதுகில் வலி
மனச்சோர்வு மற்றும் சோகம்
முடி கொட்டுதல்
முடி நரைத்தல்
தசை வலி
தாமதமான காயம் குணமாகும் நிலை
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல்
நாள் முழுவதும் சோம்பலாக இருத்தல்


வைட்டமின் டி உடலுக்கு ஏன் முக்கியமானது?


உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. வைட்டமின் டி குறைவினால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. நாள் முழுவதும் நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறீர்கள். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, விரைவில் நோய்வாய்ப்பட நேரிடும். எலும்பு பிரச்சனை மற்றும் பற்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். வைட்டமின் டி உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் (Health), எலும்புகளை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மனச்சோர்வை போக்கவும் உதவுகிறது.


ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!


உடலில் வைட்டமின் டி  குறைபாட்டால், எலும்புகளும் பலவீனமடைகின்றன. வைட்டமின் டி குறைபாடு நோய்கள்


எலும்பு நோய்கள் - ஆஸ்டியோமலாசியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்
இருதய நோய்கள்
சர்க்கரை நோய்
தொற்று மற்றும் அழற்சி நோய்கள்
புற்றுநோய்
உயர் இரத்த அழுத்தம்
மலச்சிக்கல்
வயிற்றுப்போக்கு
பலவீனமான பற்கள்


டயட் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், தற்போது நகர்ப்புற வாழ்க்கை முறையில், வைட்டமின் டி குறைபாடு மக்களிடையே அதிகமாக தொடங்கியுள்ளது. இதற்கான காரணத்தை விளக்கிய அவர், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கும் நாள் முழுவதும் சூரிய ஒளி கிடைப்பதில்லை, இதனால் உடலில் வைட்டமின் டி குறைபாடு உள்ளது என்றார். இருப்பினும், உங்கள் உணவில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், வைட்டமின் டி குறைபாட்டை நீங்கள் பெருமளவில் சமாளிக்கலாம்.


READ ALSO | நெல்லிக்காயை இப்படி பயன்படுத்தினால் எடை குறையும்


கீழ்கண்டவற்றை சாப்பிட்டால், வைட்டமின் டி (Vitamin D Rich Food) கிடைக்கும்.


சூரிய ஒளி
பால்
முட்டையின் மஞ்சள் கரு
தக்காளி
பச்சை காய்கறிகள்
எலுமிச்சை
முள்ளங்கி
முட்டைக்கோஸ்
பன்னீர்


இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR