மன அழுத்தம், வேலைப்பளு, சுற்றுசூழல் மாசு, மரபணு மாற்றம், சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் ஆண், பெண் இருபாலருக்கும் இப்போது முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்து விட்டது.  முடிகொட்டுவதே பலருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது, குறிப்பாக இளம் வயதினருக்கு தான் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது.  இதனை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து இங்கே காண்போம்.  அடிக்கடி விதவிதமான ஹேர்ஸ்டைல் செய்வதை தவிர்ப்பது நல்லது, இதனால் முடி எளிதில் பழுதாகிவிடும்.  ஸ்ட்ரெய்ட்னர், கர்லர் போன்ற ஹீட் ஆன பொருட்களை பயன்டுத்தி முடியை அழகு செய்வது முடியை பாழாக்குவதோடு, ஈரப்பசை இல்லாமல் செய்துவிடுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Marburg virus: மார்பர்க் வைரஸ் கொரோனா விட கொடியதா.. பீதியை கிளப்பும் WHO


முடிக்கு சாயம் பூசுவது, ப்ளீச் செய்வது போன்ற எவ்வித கெமிக்கல் நிறைந்த முடி பராமரிப்பையும் செய்யக்கூடாது.  அதேபோல ஷாம்பூ தலையிலுள்ள அழுக்கை நீக்கத்தான், அதனை அடிக்கடி பயன்படுவதால் அதிலுள்ள சல்பேட் இளநரை, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை கொடுக்கிறது.  மரத்தினால் செய்யப்பட்ட சீப்புகள், சாஃப்டான ப்ரஷ் போன்றவற்றை தலைக்கு பயன்படுத்தினால் ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர உதவும்.  வைட்டமின்-டி, வைட்டமின்-சி மற்றும் இரும்புசத்து அதிகம் எடுத்துக்கொள்வது முடி உதிர்வுக்கு தீர்வை அளிக்கிறது.  மேலும் ஜின்க், ரிபோபிளேவின், போலிக் அமிலம், வைட்டமின்-பி12, பயோட்டின், வைட்டமின்-இ போன்றவை முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.



மேலும் பெப்பர்மின்ட், சைனீஸ் ஹைபிஸ்கஸ், ஜின்செங், ஜடாமன்சி, லேவண்டர் போன்றவை கலந்த எண்ணெய்களை முடிகளுக்கு பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.  தினமும் குறைந்தது 4 நிமிடங்களாவது ஸ்கால்ப் மசாஜ் செய்யவேண்டும், உங்களது தினசரி டயட்டில் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, பீன்ஸ், கீரை வகைகளை சீத்துக்கொள்ள வேண்டும்.  புகைபிடிப்பது உங்கள் முடிகளை சேதப்படுத்துகிறது, அதனால் புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.


மேலும் படிக்க | Boost Brain Function: இதை சாப்பிட்டா மூளை ஒழுங்கா வேலை செய்யும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR