கோடை காலம் தொடங்கியுள்ளதால் மாம்பழ சீசனும் தொடங்கிவிட்டது. மாம்பழம் மீது பேராசைக் கொண்டவர்கள் தங்களின் ஆசையை தீர்த்துக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால் வகை வகையாக இருக்கும் மாம்பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. இனிப்பு, புளிப்பு என உங்கள் நாவை ருசியில் திணறடிக்கும் வகைகள் மாம்பழத்தில் இருக்கின்றன. இது தவிர பல ஆரோக்கிய நன்மைகளும் இருக்கிறது என்பதால், கோடைகாலத்தில் மாம்பழத்தில் குழம்புகூட வைத்து சாப்பிடுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Malaria vs Food மலேரியா பாதித்தவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிடக்கூடாது


மாம்பழ ஊறுகாய், மாங்காய் சட்டினி என வெரைட்டியான உணவு ரெசிப்பிகளையும் நீங்கள் இந்த சீசனில் பார்க்க நேரிடும். ஆனால், அனைவரும் மாம்பழத்தை சாப்பிடலாமா? என்ற கேள்வி இருக்கிறது. நீரிழிவு முதல் இதய நோய் வரை என பல நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஒருபுறம் இருக்க, உடல் எடையை குறைப்பது மட்டுமே கொள்கையாக வைத்திருக்கும், அதாவது டையட் பின்பற்றுபவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். மாம்பழம் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற
கேள்வி இருக்கும். 


நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழம் சாப்பிடுவதால் எடை குறையாது. நீங்கள் தினமும் 1 முதல் 2 துண்டுகள் வரை மாம்பழம் சாப்பிடலாம். இருப்பினும், அதிக அளவு மாம்பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாம்பழம் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை குறையாது. மாறாக கூடும்.


உடல் எடை கூடுமா?


ஆம், உடல் எடை குறைப்பிற்கான டையட்டில் இருப்பவர்கள் மாம்பழத்தை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும். மாம்பழத்தில் கலோரிகள் அதிகம். எனவே நீங்கள் அதிக கலோரிகளை உட்கொண்டால், எடை இழப்பு முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது. 


மாம்பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?


சிலர் உணவுக்குப் பிறகு மாம்பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால் அதை செய்யக்கூடாது. சாப்பிட்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். இந்த நேரத்தில் நீங்கள் அதிக கலோரிகளை உட்கொள்கிறீர்கள். எனவே, மாம்பழத்தை எப்போதும் மதியம் சாப்பிட வேண்டும். மாம்பழம் சாப்பிட இதுவே நல்ல நேரம்.


மேலும் படிக்க | தேங்காய் பால் டீ பற்றி கேள்விப்பட்டதுண்டா: ஏகப்பட்ட நன்மைகள் இருக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR