தேநீர் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். பொதுவாக மக்கள் தேநீர் தயாரிக்க பசு அல்லது எருமை பால் அல்லது பால் பவுடர் பயன்படுத்துகின்றனர். ஆனால் நீங்கள் எப்போதாவது தேங்காய் பால் டீ குடித்திருக்கிறீர்களா? தேங்காய் பாலில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அத்தகைய சூழ்நிலையில், தேங்காய் பால் டீயின் நன்மைகளைப் பற்றி இன்று நாம் இங்கே விரிவாக காண்போம்.
தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரின் 3 நன்மைகள்
1. எடையைக் குறைப்பதில் பயன் தரும்
எடை அதிகரிப்பு பிரச்சனை இந்தியாவில் புதிதல்ல, ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரத்தின் வருகையுடன், இந்த பிரச்சனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், தேங்காய் பால் தேநீர் எடை குறைக்க உதவும். எடையை அதிகரிக்கும் கொழுப்பை அழிக்கும் தன்மை தேங்காய்க்கு உண்டு. இதில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க இது பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த பழத்தில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
3. இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
இந்தியாவில், எண்ணெய் நிறைந்த உணவுகளின் நுகர்வு மிகவும் அதிகமாக உள்ளது, இதன் காரணமாக இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது, அத்தகையவர்கள் தேங்காய் பால் தேநீர் குடித்தால் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தேங்காயை உட்கொள்வது அல்லது அதன் பாலில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்துவது கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை போக்க உதவுகிறது.
தேங்காய் பால் டீயை எப்படி தயாரிப்பது
* தேங்காய் பால் தேநீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
* அதில் மூன்று க்ரீன் டீ பைகளை போடவும்.
* கால் கப் தேங்காய் பால் மற்றும் 2 டீஸ்பூன் கிரீம் சேர்க்கவும்.
*நன்கு கலக்கி க்ரீன் டீ பையை அகற்றவும்.
* நீங்கள் விரும்பினால், அதில் சிறிது சர்க்கரையை சேர்த்துக்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR