தீபாவளியில் எடை ஏறிவிட்டதா? வேகமாக வெயிட் லாஸ் செய்ய உதவும் சூப்பர் டிப்ஸ்
Weight Loss Tips: பண்டிகை காலத்தில் மக்கள் பொதுவாக பல வித இனிப்புகள் மற்றும் பிற பலகாரங்களை உட்கொள்வதால் உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது.
Weight Loss Tips: உடல் பருமன் இந்த நவீன உலகில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. பெரும்பாலும், ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்காளாக பார்க்கப்படுகின்றன. உடல் எடை அதிகரிப்பதால் இன்னும் பல வித நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன. ஆகையால் உடல் பருமன் அதிகமானால் அதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிக அவசியமாகும்.
தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம். உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. அதுவும் சில பண்டிகைகள், விழாக்கள் ஆகிய நேரங்களில் நாம் நம்மை அறியாமல் பல வித உணவுகளை உட்கொள்கிறோம். உதாரணமாக நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில், மக்கள் பொதுவாக பல வித இனிப்புகள் மற்றும் பிற பலகாரங்களை உட்கொள்வதால் உடல் எடை இந்த பண்டிகை காலத்தில் வேகமாக அதிகரித்து விடுகின்றது. இதை உடனடியாக குறைக்காவிட்டால், தொப்பை கொழுப்பும் அதிகரித்த எடையும் அப்படியே தங்கிவிடும். ஆகையால் இந்த கூடுதல் கொழுப்பையும் எடையையும் உடனடியாக அகற்ற வேண்டியது மிக அவசியம்.
தீபாவளிக்கு பிறகு உடல் எடையை குறைக்க உதவும் டிப்ஸ்
அதிக தண்ணீர் குடிக்கவும்
உடலில் இனிப்புகளின் விளைவைக் குறைக்க, அதிக தண்ணீர் (Water) குடிப்பது அவசியம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். குறைந்தது 4 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். தீபாவளியின் போது அதிக இனிப்புகளை சாப்பிடும் நபர்கள் உடனடியாக வெந்நீரை உட்கொள்வது நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சி
தீபாவளிக்குப் பிறகு உடல் எடையைக் குறைக்க ஆசைப்படும் நபர்கள், கண்டிப்பாக நடைப்பயிற்சியை (Walking) அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்க வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் நடப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இனிப்புகளின் முலம் கிடைக்கும் கலோரிகளை வேகமாக எரிக்க நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது.
மேலும் படிக்க | தீபாவளிக்கு பின் இது முக்கியம் - நச்சுகளை வெளியேற்றும் இந்த 4 பானங்கள்...!
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்
தீபாவளி பண்டிகை காலத்தில், இனிப்புகளைத் தவிர, நார்ச்சத்து (Fiber) நிறைந்த உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து உடலின் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. ஆகையால், தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
கலோரி உட்கொள்ளல்
இனிப்புகளில் அதிக கலோரிகள் உள்ளன. இனிப்புகளை உட்கொள்ளும் வேளைகளில் கலோரி (Calories) உட்கொள்ளலும் அதிகமாகி, அது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஆகையால் தீபாவளியின் போது, இனிப்புகளை சாப்பிட்டால், மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றில் லேசான உணவுகளை உட்கொண்டு கலோரி உட்கொள்ளலை சமன் செய்ய முயற்சிக்க வேண்டும்.
கிரீன் டீ
பண்டிகைக் காலங்களில் உட்கொள்ளப்படும் அதிகமான இனிப்புகளின் விளைவை குறைக்க, தினமும் கிரீன் டீ (Green Tea) உட்கொள்வது அவசியம். தினமும் 2-3 கப் க்ரீன் டீ குடித்து வந்தால், இனிப்புகளால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் குறையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ