தீபாவளிக்கு பின் இது முக்கியம் - நச்சுகளை வெளியேற்றும் இந்த 4 பானங்கள்...!

Post Diwali Detox Drinks: தீபாவளி கொண்டாட்டத்திற்கு பின் உடலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த 4 ஆரோக்கிய பானங்களும் நிச்சயம் உதவியாக இருக்கும். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 1, 2024, 12:02 PM IST
  • அதிக இனிப்புகளை தீபாவளி காலத்தில் உண்போம்.
  • அதேபோல், இரவு தாமதமாக உண்போம்.
  • எனவே தீபாவளிக்கு பின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதும் அவசியம்.
தீபாவளிக்கு பின் இது முக்கியம் - நச்சுகளை வெளியேற்றும் இந்த 4 பானங்கள்...! title=

Post Diwali Detox Drinks: தீபாவளி அனைத்து வகையான கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு பண்டிகை எனலாம். நாடு முழுவதும் இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் புத்தாடைகளை வாங்கி, தெரிந்தவர் தெரியாதவர்களுக்கு இனிப்புகளை வழங்குவது, பட்டாசுகளை வெடிப்பது என தீபாவளிக்கு கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனால் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என்பதால் அதிலும் சிரத்தையாக இருக்க வேண்டும். 

அதிக இனிப்புகளை உண்பது, இரவு நீண்ட நேரத்திற்கு பின்னர் சாப்பிடுவதை ஆகியவை உங்களின் செரிமான அமைப்பு முதல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் சிற்சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே, அதில் இருந்து நிவாரணம் பெற உடனடியாக சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டியதும் அவசியமாகும். அதிலும் தீபாவளிக்கும் பின் கொண்டாட்டங்களால் ஏற்படும் உபாதைகளை போக்க சத்தான சில நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 

இந்த நீர் ஆகாரங்களை குடிப்பதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும், உடலில் ஊட்டச்சத்துகளை மீண்டும் நிரப்பும் வகையிலும், செரிமானத்தை சீராக வைக்கவும் உதவும் எனலாம். இந்த நீர் ஆகாரங்களில் வைட்டமிண்கள், கனிமங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. இதனால்தான் இவை நச்சுகளை வெளியேற்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்க உதவுகிறது. அந்த நான்கு நீர் ஆகாரங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம். 

மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் பயப்படாமல் இந்த உணவுகளை சாப்பிடலாம்

மஞ்சள் - இஞ்சி தேநீர்

மஞ்சள், இஞ்சி இரண்டும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டதாகும். மேலும் இவை இரண்டும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்களை எதிர்த்து, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் கல்லீரலை சுத்தமாக்குவதில் உதவும். இஞ்சி செரிமானத்தை சீராக்கி, குமட்டல், நெஞ்சரிச்சலை போக்கும். 

தேங்காய் தண்ணீரில் சீரகமும், மல்லியும்...

தேங்காய் தண்ணீரில் உடலுக்கு தேவையான கனிமங்கள் உள்ளன. இது நீர்ச்சத்துடன் இருக்க உதவும். செரிமானத்தையும் சீராக வைத்திருக்க உதவும். சீரகம் மற்றும் மல்லி விதைகள் உப்புசத்தை தவிர்க்கும். 

வெள்ளரிக்காய் - புதினா ஜூஸ்

இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள், கனிமங்கள், வைட்டமிண்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இவை நச்சுகளை வெளியேற்றி செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்கும். வெள்ளரிக்காய் உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கும். அதேபோல் புதினா செரிமானத்தை தூண்டி உப்புசத்தை தவிர்க்கும். 

லெமன், தேன் உடன் கிரீன் டீ

கிரீன் டீயில் அதிக ஆண்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது தேவையற்ற செல்களை வெளியேற்ற உதவிகரமாக இருக்கும். எலுமிச்சை சாரு செரிமானத்தை தூண்டும், நோய் எதிர்ப்பு சக்தியையும் உந்தும். தேனில் உள்ள நுண்ணுயிர்கள் செரிமான அமைப்பில் நன்மை அளிக்கும். 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை. 

மேலும் படிக்க | தேமல் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆயுர்வேத டிப்ஸ்..!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News