மூளை - இதயத்தை பாதிக்கும் வைட்டமின் பி1 குறைபாடு... அறிகுறிகள் இவை தான்...!
Effects & symptoms of Vitamin B1 Deficiency: வைட்டமின் பி1 குறைபாடு, மூளை, தசைகள் செயல்பாட்டை பாதிப்பதோடு எலும்புகளையும் பலவீனப்படுத்தும்.
உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எல்லா சத்துக்களுமே அவசியம். உடல் ஆரோக்கியத்திற்கு புரதம், இரும்பு சத்து, கால்சியம் ஆகியவற்றை போலவே வைட்டமின்களும் அவசியம். அதில் ஒன்று வைட்டமின் பி1. இந்த வைட்டமின் குறைபாடு, மூளை, தசைகள் செயல்பாட்டை பாதிப்பதோடு எலும்புகளையும் பலவீனப்படுத்தும். வைட்டமின் பி1 குறைபாடு பொதுவாக பெரி பெரி நோய் ஏற்பட காரணமாக அமைகிறது.
வைட்டமின் பி1 என்றால் என்ன? (What is Vitamin B1?)
உடலின் பல்வேறு செல்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் இது முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் பி 1 தயாமின் என்றும் அழைக்கப்படுகிறது. நீரில் கரையக்கூடிய வைட்டமினான இது சில உணவுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது.அதனால் தான் நறுக்கிய காய்கறிகள் பழங்களை தண்னணீரில் கழுவக் கூடாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். தண்ணீரில் கழுவுவதால், நீரில் கரையும் இந்த விட்டமின் உடலுக்கு கிடைக்காமல் (Health Tips) போய்விடும். வைட்டமின் பி1 கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்ற உதவுகிறது என்பதால், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் அவசியம்.
வைட்டமின் பி1 குறைபாடு உடலில் இருப்பதற்கான அறிகுறிகள் (Symptoms of Vitamin B1 Deficiency)
1. குழப்பம், நினைவாற்றல் இழப்பு, மனநல பிரச்சினைகள்
2. கை கால்களில் உணர்வின்மை பிரச்சனை
3. உடல் எடை இழப்பு
4. தசை பலவீனம் அடைதல்
5. நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடைதல்.
6. மூச்சுத் திணறல்
7. பசியின்மை
8. கால்களில் வீக்கம்.
மேலும் படிக்க | கல்லீரலை கவனமாய் பாதுகாக்க உதவும் அற்புதமான 5 உணவுகள்
உடலுக்கு எவ்வளவு தினமும் வைட்டமின் பி1 நஎந்த அளவிற்கு தேவை?
1. 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு தினமும் 1.2 மி.கி தியாமின் தேவை
2. 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தினமும் 1.1 மி.கி தியாமின் தேவைப்படுகிறது.
3. கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இந்த அளவு 1.4 மி.கி.
வைட்டமின் பி1 குறைபாட்டை நீக்கும் உணவுகள் (Vitamin B1 Rich Foods)
இறைச்சி மற்றும் மீன் ஆகியவை வைட்டமின் பி1 ஊட்டச்சத்தின் நல்ல ஆதாரங்கள், எனினும் நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைககளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இதில் வைட்டமின் பி1 அதிகளவில் உள்ளது. காய்கறிகளில் காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, கீரைகள் ஆகியவை வைட்டமின் பி1 நிறைந்தவை.முழு கோதுமை ரொட்டியின் ஒரு துண்டில் 0.1 மி.கி அல்லது தினசரி தேவையில் 7 சதவீதம் உள்ளது.
வைட்டமின் பி1 குறைபாடு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை
வைட்டமின் பி1 அதிகம் உள்ள உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைத்த உணவினை மீண்டும் மீண்டும் சூடாக்குவது தயாமினை அழிக்கிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அதோடு, காய்கறிகள் நறுக்கிய பின் கழுவுவதால், நீரில் கரையிம் இந்த வைட்டமினை இழந்து விடும்வோம். தேநீர் மற்றும் காபியில் டேனின்கள் இருப்பதால், உடல் வைட்டமின் பி1 சத்தை உறிஞ்சுவதை தடுக்கிறது. எனவே சாப்பிட்ட பின் காபி டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. மது அருந்துவதும் வைட்டமின் பி1 குறைபாட்டை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ