நீரிழிவை கட்டுப்படுத்த.... இன்சுலின் உற்பத்தியை பெருக்கும் ஆற்றல் கொண்ட ‘சூப்பர்’ உணவுகள்

Diabetes Home Remedies:  இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். உடலில் இன்சுலின் சரியாக சுரக்காத போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. 

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதாவது குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட இன்சுலினை சுரக்க செய்ய உதவும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

.

1 /7

நாவல் பழம்: குறைந்த கிளைசெமிக் குறியீடு நாவல் பழத்தில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் சேர்மங்கள் உள்ளன. ஆயுர்வேதத்தில், நாவல் பழங்கள் மட்டுமல்லாது அதன் விதைகள் மற்றும் இலைகள் என அனைத்தும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

2 /7

வெந்தயம்: சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வெந்தயத்தில் உள்ள ட்ரைகோனெல்லின் இன்சுலினை சுரக்க செய்து இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.  

3 /7

வெண்டைக்காய்:  நார்ச்சத்து உள்ள பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறியான வெண்டைக்காய், இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது. 

4 /7

இலவங்கப்பட்டை: இந்திய மசாலா வகையில் முக்கிய இடம் வகிக்கும் இலவங்கப்பட்டையை இன்சுலின் உற்பத்திக்கு உதவும். தேநீரில் இலவங்கப்பட்டை சேர்ப்பது அதிக நன்மை பயக்கும். இது கிட்டத்தட்ட கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் போலவே செயல்படும்.

5 /7

பாகற்காய்: சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கூறுகளள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை தூண்டும். 

6 /7

மஞ்சள்: ஆயுர்வேதத்தில் மஞ்சளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.