உடல் ஆரோக்கியம் குறித்து அதிகம் சிந்திப்பவர்கள், முதலில் உணவில் எண்ணெயை தவிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர் இரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், முதலில் உணவில்  எல்லா வகையான எண்ணெய்களையும் தவிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். உடல் எடையை குறைக்க நினைக்கும் மக்கள் மனதிலும் இதே எண்ணம் தான்.


ஆனால், நிபுணர்களின் கூற்று வேறு விதமாக உள்ளது எண்ணெயை முற்றிலுமாக தவிர்ப்பவர்கள் சோர்வு  ஏற்படுவதோடு பல வித நோய்களும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. முதலில் நம் உடலுக்கு கொழுப்பு தேவைப்படுகிறது. கொழுப்பு சத்து எனது நமது மூளை, நரம்பு மண்டலம், நரம்புகள்  ஆகியவை சிறப்பாக  செயல்பட மிகவும் தேவை.  அதனால், உணவில் எண்ணெய் சேர்ப்பதை முற்றிலும் தவிர்ப்பதால், நன்மைகளுக்கு பதிலாக தீமையே அதிகம் என்கின்றனர் வல்லுநர்கள். உணவில் எண்ணெய் சேர்ப்பதை முற்றிலும் தவிர்ப்பது, ​​உங்கள் உடலை  துன்புறுத்துவது போன்றது. 


உணவில்,ஆரோக்கியமான எண்ணெயை சேர்ப்பது சிறந்த பலனைத் தரும். அதில் முதலில் வருவது நல்லெண்ணெய். நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. நல்லெண்ணெயில் ஈஸ்ட்ரோஜென் இருக்கிறது. மெனோபாஸ் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் குறைந்து எலும்பு தேய்மானம் ஏற்படும். இதை வரும் முன் தடுக்க வேண்டுமென்றால் பெண்கள் நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்லெண்ணெய்யில் இருக்கிற கொழுப்பு, ரத்தக்குழாய்களில் படியாது என்பதால் இதய நோய் உள்ளவர்கலும்  உணவில் நல்லெண்ணெயை சேர்த்துக்கொள்ளலாம்.


ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!


தேங்காய்  எண்ணெய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. ஏனென்றால், அதில் ஆன்டிவைரல் கூறுகள் உள்ளன. இது நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கும். 


ஆலிவ் எண்ணெயிலும்  வைட்டமின் ஈ நிறைந்துள்ளது என்பதால் ஆன்டிஆக்ஸிடண்டாக செயல்படுகிறது, இது கெட்ட கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இதயத்திற்கு நல்லது என்பதோடு  உங்கள் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். நம் முன்னோர்கள் தேங்காய் எண்ணெயின் அற்புத தன்மைகளை அறிந்திருந்ததால், உணவில் அதிக அளவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தினர்.  தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer's disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்


அதனால், ஆரோக்கியமான எண்ணெய் சேர்த்து சமைப்பது, உடலுக்கு நன்மை விளைவிக்கும்.  ஆரோக்கிய சிந்தனை அதிகம் உள்ளவர்கள்,  உணவில் எண்ணெய் சேர்ப்பதை முற்றிலும் தவிர்த்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றனர். எதையுமே அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது மனதில் வைத்துக் கொண்டு. உணவில் ஆரோக்கியமான எண்ணெயை சேர்த்து ஆரோக்கியமாக வாழலாம். 


ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR