புதுடெல்லி: இன்றைய இளம் தலைமுறையினர் திருமணமான உடனேயே குழந்தைப் பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. ஏனென்றால் முதலில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பதோடு,  தங்கள் தொழிலில், வேலையில் முதலில் முன்னேற விரும்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், கருத்தடை சாதனங்கள், கருத்தடை மருந்துகளின் பயன்பாடு,  தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருத்தடை சாதனங்க மற்றும் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மொத்த கருத்தரிப்பு விகிதம் (TFR)  குறைந்துள்ளது.  எனினும் கருத்தடை மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவதால் கருவுறுதல் சக்தியும் பலவீனமடைகிறது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், கருத்தடை மாத்திரையை சாப்பிடுவதற்கு முன்பு, கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பது கருவுறுதல் தன்மையை சக்தியை குறைக்குமா? என்ற கேள்விக்கான விடைகளை தெரிந்து கொள்ளலாம்.


ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்


கருத்தடை மற்றும் மலட்டுத்தன்மைக்கு இடையே உள்ள தொடர்பு


தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS) நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில், 2015-16க்குப் பிறகு, குடும்பக் கட்டுப்பாட்டிற்காக, நவீன கருத்தடை முறைகளைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 8.7 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இது ஒரு நல்ல செய்தி தான். இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிக்கும் விகிதம் குறைந்து வருவதையே இது குறிக்கிறது.  எனினும் இந்த கணக்கெடுப்பு கருத்தடை முறைகள் மற்றும் மலட்டுத்தன்மைக்கு இடையிலான உறவு பற்றிய புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.


குழந்தையின்மை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்


உலக சுகாதார அமைப்பு (WHO) கருவுறாமை, அல்லது மலட்டுத் தன்மை என்பது ஆண் அல்லது பெண் இனப்பெருக்க அமைப்பில் உள்ள கோளாறு என்று நம்புகிறது. 12 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக உடலுறவு கொண்ட பிறகும் கருத்தரிக்க முடியாமல் போனால், குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஏதோ உடல் நல பிரச்சனை தான் காரணம் என அறியப்படுகிறது. தற்போது, ​​உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையால் போராடி வருகின்றனர். 


குழந்தையின்மை 


குழந்தையின்மை பல காரணங்களால் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, கருக்குழாயில் அடைப்பு அல்லது கோளாறுகள் (கர்ப்ப குழாய் கோளாறுகள்), கருப்பை கோளாறுகள் (endometriosis), பிறவி கோளாறுகள் (septate uterus), கருப்பை நோய் (polycystic ovarian syndrome) மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை காரணமாகும். இதனுடன், மரபணு நிலையும் மற்றொரு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர, அதிக அளவிலான, கருத்தடை மாத்திரைகள், சாதனங்களும் காரணம் ஆகிறது.


ஆணுறைகள், மாத்திரைகள், காப்ப்ர் டி , கருத்தடை ஊசிகள் மற்றும் கருப்பை சாதனங்கள் ஆகியவை இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் ஆகும். இருப்பினும், கருத்தரிக்கத் திட்டமிடும் போது நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.


கருத்தரிப்பதில் சிக்கல் 


கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திய பெண்களில் 83 சதவீதம் பேர் மட்டுமே முதல் வருடத்தில் கருத்தரிக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கருத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்துவது, குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும் வாய்ப்பிஅ அதிகரிக்கும் எனவும், கருத்தரிப்பதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR