இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஸ்மார்ட்போன்கள், கணினி திரைகள் போன்றவற்றிலேயே அதிக நேரத்தை கழிக்கின்றனர்.  நீண்ட நேரம் இதுபோன்ற டிஜிட்டல் திரைகளை நீங்கள் அதிக நேரம் பார்ப்பதால் இதிலிருந்து வெளிவரும் கதிர்கள் உங்கள் கண்களில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும். மடிக்கணினிகள், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் தொலைக்காட்சியை நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதால் கண் சோர்வு, உலர் கண்கள், தலைவலி, மங்கலான அல்லது இரட்டை பார்வை மற்றும் கழுத்து அல்லது தோள்பட்டை வலி போன்றவை ஏற்படக்கூடும்.  சில சமயங்களில் கவனம் செலுத்துவதில் சிரமம், தூக்கமின்மை போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.  இதுதவிர சமூக ஊடகங்களில் அதிக நேரம் நேரத்தை செலவிடுவது, திரைப்படம் பார்ப்பது அல்லது ஆன்லைன் கேம்களை விளையாடுவது போன்றவற்றின் மூலமும் உங்களால் கண்கள் பாதிப்படையும்.  மேலும் சூடான நீரில் கண்களைக் கழுவுதல், கண் சொட்டு மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துதல் அல்லது கண்களை அடிக்கடி தேய்த்தல் போன்ற சில காரணங்களாலும் கண்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Weight Loss: ஓவரா உடல் எடை ஏறுதா? முட்டைகோஸ் சாப்பிடுங்க, உடனே குறையும்



லேப்டாப், ஸ்மார்ட்போன் அல்லது தொலைக்காட்சி என எதுவாக இருந்தாலும் சரி நீங்கள் அதிக நேரம்  பார்த்துக் கொண்டிருப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.  இதுபோன்ற எலக்ட்ரானிக் திரைகள் நீல ஒளியை வெளியிடும், இது உங்கள் கண்களில் சோர்வை ஏற்படுத்தி விழித்திரையை சேதப்படுத்தும், எனவே இதிலிருந்து நீங்கள் விலகியிருக்க வேண்டும்.  கண்களில் வலி அல்லது எரிச்சல் ஏற்பட்டால் நீங்களாகவே கண் சொட்டு மருந்துகள் அல்லது உப்பு கரைசல்களைப் பயன்படுத்த கூடாது.  இவை உங்களுக்கு தீர்வை கொடுத்தாலும், கண்களை உலர வைக்கும்.  சில சமயம் காலாவதியான கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தினால் எரிச்சல், வீக்கம் மற்றும் ஏதேனும் கண் தொற்று ஏற்பட்டுவிடும்.  



மொபைல் போன்கள் அல்லது பிற கேஜெட்களைப் பயன்படுத்தும் போது  சிலர் கண் சிமிட்டல் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இப்படி கண் சிமிட்டாமல் நீண்ட நேரம் திரையை பார்த்துக்கொண்டு இருந்தால் கண்களில் வறட்சி மற்றும் கண் சோர்வு ஏற்படும்.  கண்களில் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படும் போது பலரும் உடனே கண்களைத் தேய்த்துவிடுகின்றனர்.  கண்களை தேய்ப்பதால் கார்னியாவில் கீறல்கள் ஏற்படலாம் மற்றும் கான்ஜுன்டிவாவின் மெல்லிய அடுக்கு சேதமடையலாம், எனவே இதை தவிர்த்துவிடுங்கள்.


மேலும் படிக்க | நுங்கு சாப்பிட்டா 'அது பெரிதாகுமா' தெரியாது... ஆனா இவ்வளவு நல்லது இருக்கா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ