இந்தியாவில் கோடையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சருமத்தை மிகவும் கவனமாக கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை-யில் வியர்வையால் சருமத்தில் அதிக எரிச்சல் ஏற்படும். இதன் காரணமாக தோலில் புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படுகின்றன. மேலும், சட்டென்று பாதிக்கப்படும் (சென்சிடிவ்) சருமம் உள்ளவர்கள் கோடையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 


கோடையில் தோல் சிவத்தல், சொறி சிரங்கு போன்ற பிரச்சனைகள் பொதுவானவை. இந்த அனைத்து பிரச்சனைகளையும் தவிர்க்க, மக்கள் பெரும்பாலும் சந்தையில் வாங்கும் பல விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இவற்றால் பலன் இருப்பதில்லை. மாறாக, தோல் இன்னும் மோசமடைகிறது. 


இத்தகைய சூழ்நிலையில், கோடைகாலத்தில் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தவிர்க்க இயற்கையான வழிகள் இருந்தால், அது ஒரு வரப்பிரசாதமாக அமையும். அப்படிப்பட்ட, சரும பாதுகாப்பிற்கான சில எளிய வழிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


துளசி-புதினா கொண்டு ஐஸ் க்யூப் செய்யவும்


ஐஸ் கட்டிகளை சருமத்தில் தடவுவது கோடையில் மிகவும் நல்லது. இந்த வழியில் நீங்கள் தோலில் உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப் கொண்டு மசாஜ் செய்வது அதிக நன்மைகளை அளிக்கும். இது தவிர புதினா மற்றும் துளசியின் ஐஸ் கட்டிகளும் மிகவும் நன்மை பயக்கும். உங்களுக்கு ஆய்லி, அதாவது எண்ணெய் பசையான சருமம் இருந்தால், உருளைக்கிழங்கு ஐஸ் கட்டிகளை சருமத்தில் தடவாதீர்கள்.


மேலும் படிக்க | வெள்ளைபடுதல் நோயிக்கு சிறந்த தீர்வு : இதை மட்டும் செய்தால்போதும்..! 


ஐஸ்கியூப் செய்ய தேவையான பொருட்கள்
துளசி இலைகள்
புதினா இலைகள்
பன்னீர்
தண்ணீர்


ஐஸ்கியூப் தயாரிப்பது எப்படி?


ஒரு கப் தண்ணீரை எடுத்து அதில் 6-7 துளசி மற்றும் 6-7 புதினா இலைகளை ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து அவற்றை நன்கு கழுவி இலைகளை நன்றாக நசுக்கிக்கொள்ளவும். நீங்கள் விரும்பினால், அவற்றை ஒரு பேஸ்டாகவும் செய்துகொள்ளலாம். இப்போது அரைத்த இலைகளை 1 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 கொதி வரும் வரை அதை கேஸில் வைக்கவும், அதன் பிறகு இறக்கி விடவும். இந்த நீர் ஆறியதும் அதில் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். அதன் பின்னர் அவற்றை ஒரு ஐஸ் தட்டில் வைத்து உறைய வைக்கவும்.


ஐஸ் கட்டியை எவ்வாறு பயன்படுத்துவது


தினமும் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் வட்ட வடிவில் முகத்தில் மசாஜ் செய்யவும். உங்கள் சருமம் சென்சிடிவான, அதாவது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய சருமமாக இருந்து, ஐஸ் கட்டிகளை நேரடியாக முகத்தில் தடவ முடியாது என்றால், அதை ஒரு காட்டன் நாப்கினில் சுற்றி பின் மசாஜ் செய்யவும்.


இப்படி செய்வதால், முகம் புத்துணர்ச்சி பெறும், முகத்தில் உள்ள தூசு, மாசு ஆகியவை அகலும். முகத்தில் உள்ள துவாரங்கள் திறக்கும். இது ஒரு ஆரோக்கியமான, இயற்கையான முக மசாஜாக இருக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா, இந்த உணவுகளை அதிகமா எடுத்துக்கோங்க 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR