வெள்ளைபடுதல் நோய்க்கு சிறந்த தீர்வு : இதை மட்டும் செய்தால்போதும்..!

பெண்களுக்கான வெள்ளைபடுதல் நோய்க்கு அருமருந்தாக அமையும் செம்பருத்தி பூ. 

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 25, 2022, 03:15 PM IST
  • பெண்களுக்கான வெள்ளைபடுதல் நோய்
  • அருமருந்தாக அமையும் செம்பருத்தி
  • தினமும் காலையில் மூன்று பூ சாப்பிடலாம்
வெள்ளைபடுதல் நோய்க்கு சிறந்த தீர்வு : இதை மட்டும் செய்தால்போதும்..!  title=

பெண்கள் மத்தியில் வெள்ளை படுதல் நோய் என்பது சமீப காலமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் முறையான மற்றும் சத்தான உணவுப் பழக்கமின்மை, தூக்கமின்மை, மன அழுத்தம், வேலை சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அனீமியா போன்ற நோய் தாக்கவும் அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

அது மட்டும் இன்றி இதன் காரணமாக உடலில் உள்ள எலும்புகள் பலவீணமடைவதோடு, முடி கொழிதல், கால் வலி, முதுகு வலி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களால் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளை படுதல் நீண்ட நெடிய நாட்கள் இருந்தால் முறையாக மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. இருப்பினும் பாட்டி வைத்தியம் அல்லது இயற்கை வைத்தியம் போன்றவைகள் இந்த வெள்ளை படுதல் நோயிக்கு அருமருந்தாக இருக்கும் என முன்னோர்கள் வாழ்ந்த வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகிறது. 

மேலும் படிக்க | இளம் வயதிலேயே நரைமுடி பிரச்னையா, உடனே இத பண்ணுங்க

அந்த வகையில் நம் வீட்டு வாசல்களில் ஒரே ஒரு செம்பருத்திச் செடி இருந்தால் பல்வேறு நோய்களுக்கு இது தீர்வாக அமையும். செம்பருத்தியின் இலை, பூ அனைத்துமே சிறந்த மருத்துவ குணம் கொண்டது. வெள்ளைபடுதல் நோய் உள்ள பெண்கள் அன்றாடம் வெறும் வயிற்றில் காலையில் 3 முதல் 5 சிவப்பு செம்பருத்தி பூ இதழ்களை உண்டு வந்தால் போதுமானது. 

அதேபோல இரவு தூங்க செல்வதற்கு முன்பு வெந்தயத்தை சிறிதளவு எடுத்து தண்ணீரில் ஊரவைத்து அந்த தண்ணீருடன் சேர்த்து செம்பருத்தி பூவை உட்கொண்டு வந்தால் உடல் சூடு தனிவதுடன், இருதய நோய், வெள்ளை படுதல் உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வாக அமையும். அது மட்டுமின்றி, செம்பருத்தி இலையை அறைத்து தலையில் தேய்த்து சற்று நேரம் ஊர விட்ட பிறகு குளித்தால் தலை முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை, முடியின் வறட்சி தன்மை அனைத்தும் சீராகும். இதை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால்போதும்.  

மேலும் படிக்க | Belly Fat: இந்த 5 விஷயங்களை செஞ்சா போதும், தொப்பை தொலைந்துவிடும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

Trending News