தற்போது, ​​பிஸியான வாழ்க்கை முறையால், நம் உடல் சந்திக்கும் பல பிரச்சனைகளில் ஒன்று கல்லீரலில் கொழுப்பு சேர்வது. கல்லீரலில் கொழுப்பு சேரும் பிரச்சனை குறிப்பாக அதிக கொழுப்பு உணவுகளை உண்பவர்களுக்கும், ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்க்கிறதுய். கல்லீரல் உயிரணுக்களில் இயல்பை விட அதிக கொழுப்பு சேர்வதால் பல பிரச்சனைகள் ஏற்படும். எதிர்காலத்தில், இது பல வகையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால், உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்துவது மற்றும் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். இருப்பினும், கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதாக அகற்றலாம். ஆனால் இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். கல்லீரலின் வேலை சுத்திகரிப்பு செய்வது., இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது.


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!


1. பால் திஸ்டில்  (Milk Thistle)


மில்க் திஸ்டில் ஊதா நிற பூக்கள் கொண்ட ஒரு வகை தாவரமாகும். இது மருந்து தயாரிப்பில் பயன்படுகிறது. பால் திஸ்டில் கல்லீரல் மற்றும் பித்தப்பை சிகிச்சையில் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையம் கூறுகிறது. சில பொதுவான நிலைகளில், பால் திஸ்டில் கல்லீரல் மற்றும் ஹெபடைடிஸ், கற்கள் மற்றும் சிரோசிஸ் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. கொழுப்பு கல்லீரல் சிகிச்சையில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மில்க் திஸ்டில் கல்லீரலை ஆபத்தான நச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், இது சேதமடைந்த கல்லீரல் செல்களை மீண்டும் உருவாக்குகிறது, இது கொழுப்பு கல்லீரலை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது.


2. மஞ்சள்


மஞ்சள் பல நோய்களுக்கு நன்மை தரும் பல பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் சீன மற்றும் ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கல்லீரல், தோல் மற்றும் செரிமான அமைப்பை குணப்படுத்த மஞ்சள்  உதவுகிறது. மஞ்சள் இதய நோய் மற்றும் கீல்வாதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், கல்லீரல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.


3. லிப்போட்ரோபிக் 


லிபோட்ரோபிக்  என்னும் கொழிப்பை சீராக்கும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. சில லிபோட்ரோபிக் பொருட்களில் மெத்தியோனைன், கோலின் மற்றும் பீடைன் ஆகியவை அடங்கும். முட்டையின் மஞ்சள் கரு, பீன்ஸ், முட்டைகோஸ், தயிர் போன்றவற்றில் இவை உள்ளது. அவை கல்லீரலில் இருந்து கொழுப்பு வெளியேற்ற உதவுகின்றன. கல்லீரலில் கொழுப்பு சேரும் அபாயத்தைக் குறைக்கின்றன. ம்.


4. உடற்பயிற்சி


மேலும், உடற்பயிற்சியின் மூலமும் கல்லீரல் கொழுப்பை குறைக்கலாம். இதைச் செய்ய, உங்கள் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். மேலும், திடீரென்று அதிக உடற்பயிற்சி செய்யகூடாது, அதுவும் பாதகமான பலன்களை ஏற்படுத்தும். முதலில் லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்து படிப்படியாக உடற்பயிற்சியின் வேகத்தை அதிகரிக்கவும். இந்த வீட்டு வைத்தியங்களுடன், நீங்கள் அவ்வப்போது மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்பதும், கல்லீரல் நிலையைப் பரிசோதிப்பதும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR