தொப்பை குறைய, எடை குறைய... இந்த நார்ச்சத்து உணவுகளை நம்பி சாப்பிடுங்க, ஆச்சரியப்படுவீங்க!!
Weight Loss Tips: அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகளை இங்கே பார்க்கலாம்.
Weight Loss Tips: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உடல் பருமன் இல்லாமல் இருப்பதும் மிக அவசியமாகும். இதற்கு உணவு முறையில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரிக்கின்றது. உடல் எடை அதிகரிப்பதால் இன்னும் பல பிரச்சினைகளும் நமக்கு ஏற்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகமாக இருப்பதும், உடல் எடை அதிகரிப்பதும் ஒரு பொதுவான விஷயமாக உள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொப்பையை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் நாம் பல வழிகளில் முயற்சிக்கிறோம். நமது தினசரி உணவுகளை சரியான வழியில் உட்கொண்டாலே நமக்கு தேவையான பலனை பெறலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடல் எடையை குறைக்க (Weight Loss) உதவக்கூடிய சில உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்பு முயற்சியில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் அதிக அளவில் பயன் தரும். அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகளை இங்கே பார்க்கலாம்.
ப்ரோக்கோலி (Broccoli)
ப்ரோக்கோலி உட்கொள்வதால் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இதை உட்கொள்வதால் எடை இழப்புக்கு பெரிய உதவி கிடைக்கிறது. இதை சாலட் அல்லது பொரியலாக செய்து உங்கள் உணவில் சேர்க்கலாம். இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிப்பதால் அவ்வப்போது ஏற்படும் பசி தவிர்க்கப்படுகின்றது.
உலர் பழங்கள் (Dry Fruits)
எடை இழப்பில் உலர் பழங்களுக்கு முக்கியமான பங்கு உள்ளது. இவற்றின் மூலம் எடை இழப்பில் ஆரோக்கியமான வழியில் நாம் பயன்பெறலாம். நார்ச்சத்து அதிகமாக உள்ள உலர் பழங்களை உட்கொள்வதால் அவ்வப்போது ஏற்படும் பசிக்கு நிவாரணம் கிடைக்கிறது. வயிறு நிரம்பிய உணர்வுடன் இருப்பதால் நாம் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது
ஓட்ஸ் (Oats)
உடல் பருமனுக்கு தீர்வு காண நினைப்பவர்கள் தினமும் காலை உணவில் ஓட்ஸ் உட்கொள்ளலாம். இதை உட்கொள்வதால் உடலில் உள்ள கூடுதலான கொழுப்பு குறையும். இதில் உலர் பழங்களை சேர்த்து உட்கொண்டால் சுவையும் நன்றாக இருக்கும்.
கேரட் (Carrot)
கேரட் உட்கொள்ளதால் நம் கண்களின் ஆரோக்கியம் மேம்படும், பார்வைத்திறன் அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதனால் எடை இழப்பிலும் நமக்கு நன்மை கிடைக்கின்றது. நார்ச்சத்து (Fiber) அதிகமாக உள்ள ஒரு கேரட்டில் 45 கலோரிகளும் 3 கிராம் நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆகையால் உங்கள் எடை இழப்பு டயட்டில் இதை கண்டிப்பாக சேர்த்துக் கொள்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Constipation Remedies: மலச்சிக்கல் தீர... இந்த விஷயங்களை கடைபிடிங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ