Constipation Remedies: மலச்சிக்கல் தீர... இந்த விஷயங்களை கடைபிடிங்க..!

மலச்சிக்கல் தீர செய்ய வேண்டியவை: தற்போதைய பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளில் மலச்சிக்கலும் ஒன்று. சரியான நேரத்தில் இதனை கவனித்து சரி செய்யா விட்டால், பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. 

மலச்சிக்கலை சில பழக்க வழக்கங்கள் மூலம், எளிதாக தீர்க்கலாம். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதால் பலன் கிடைக்கும்.

1 /6

மலச்சிக்கல் தானே என பலர் அலட்சியம் செய்து விடுகின்றனர். ஆனால், பல சமயங்களில், அதுவே பைல்ஸ் மட்டுமல்லாது பலவிதமான உடல் நல கோளாறுகளுக்கு காரணமாக ஆகி விடுகிறது. எனினும்,  சில பழக்க வழக்கங்கள் மூலம், எளிதாக தீர்க்கலாம்.

2 /6

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வெந்நீர் அருந்தும்போது, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்

3 /6

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற, பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி, செரிமான பிரச்சனையை ஏற்படுத்தாத, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.   

4 /6

நார்சத்து மிக்க உணவுகள் மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலுக்கு அருமருந்தாக இருக்கும். எனவே, மலச்சிக்கலைத் தவிர்க்க, நார்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

5 /6

உணவு பழக்கங்களுடன், உடற்பயிற்சியை தவறாமல் கடைபிடிப்பதும், மலச்சிக்கலில் இருந்து நிரந்திரா தீர்வை அளிக்கும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.