அதிகரிக்கும் ‘குண்டு’ பிரச்சனை! உலகில் எட்டில் ஒருவர் உடற்பருமனால் அவதி! பீதி கிளப்பும் WHO!

Obesity Public Health Challenge : சர்வதேச அளவில் உடல் பருமன் என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிறது. உடல் பருமன் என்பது அடிப்படையான நோய் அறிகுறியாக மாறிவிட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 2, 2024, 06:10 AM IST
  • சர்வதேச சிக்கலாக மாறிய உடற்பருமன்
  • 100 கோடி பேர் குண்டாயிட்டாங்க!
  • அதிர்ச்சி தரும் லான்செட் அறிக்கை
அதிகரிக்கும் ‘குண்டு’ பிரச்சனை! உலகில் எட்டில் ஒருவர் உடற்பருமனால் அவதி! பீதி கிளப்பும் WHO! title=

நீ குண்டாயிட்டே! திட்டு வாங்குபவரா நீங்கள்? உலகில் உடல் எடை அதிகமானவர்களி எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவருகிறது. எனவே குண்டானவர் என்ற கவலை உங்களுக்கு மட்டுமல்ல 100 கோடி மக்களுக்கு இருக்கிறது. இதற்காக கவலைப்படாமல் இருக்கமுடியுமா என்பது வேறு விஷயம். ஆனால், சர்வதேச அளவில் உடல் பருமன் என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிறது.

நோய் அறிகுறியாக மாறிய உடற்பருமன்

உலகில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாக லான்செட் அறிக்கை தெரிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது அடிப்படையான நோய் அறிகுறியாக மாறிவிட்டது. உடல் பருமன் அதிகரிக்கும் போது, ​​பல நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.

லான்செட் அறிக்கை

WHO மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 30 ஆண்டுகளில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த மூன்று தசாப்தங்களில் பருமனானவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் ஆயத்த உணவுகள்! இதெல்லாம் ரெடிமேட் உணவுகளா?

உணவு பழக்கத்தின் அறிகுறி
முன்பு உணவுப் பழக்கத்தின் அறிகுறியாகக் கருதப்பட்ட உடல் பருமன், இப்போது ஒரு நோயாக மாறிவிட்டது. அதிலும் உடல் எடை அதிகமானவர்களில் கணிசமான அளவு மக்கள் இந்தியாவில் உள்ளனர்.அதிலும் ஆண்களை விட பெண்கள் பெரும்பாலும் அதிக எடையுடன் உள்ளனர். அதைத்தவிர குழந்தைகளின் உடல் எடையும் அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் உடல் எடை பருமன்

ஒரு காலத்தில் இந்தியாவில் உடல் எடை குறைந்தவர்கள் அதிகமாக இருந்த நிலை மாறிவிட்டது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளது என்றால், அதில் 15 கோடியே 90 லட்சம் குழந்தைகள், 87 கோடியே 90 லட்சம் பெரியவர்கள் அடங்கியுள்ளனர்.

33 வருட தரவுகளை மதிப்பிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, 2022ஆம் ஆண்டுக்குள் உலகளவில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 88 கோடியை எட்டும் என்றும் கவலை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Alzheimer: அல்சைமர் ஒண்ணும் பெரிய வியாதி இல்ல! சுலபமா சரி செய்யலாமே! ஹெல்த் டிப்ஸ்

50 கோடியே 40 லட்சம் பேர் பெண்கள், 37 கோடியே 40 லட்சம் பேர் ஆண்கள் என்றால், சுமார் 15 கோடியே 90 லட்சம் குழந்தைகளும் உடல் பருமனாக உள்ளனர். இந்த ஆண்டு கணக்கின்படி, 15 கோடியே 90 லட்சம் பள்ளி மாணவர்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

190 நாடுகளில் ஆய்வு 

உலக அளவில் 190 நாடுகள் உடல் பருமன் தொடர்பான ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில், 22 கோடி பேரின் எடை மற்றும் உயரம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 6 கோடியே 30 லட்சம் குழந்தைகளும், 20 வயதுக்கு மேற்பட்ட 15 கோடியே 80 லட்சம் பேரும் இடம் பெற்றனர்.  

1990 முதல் உடற்பருமன் அதிகரிப்பு

1990 முதல் 2022 வரை குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் உடல் பருமன் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதில் பெண்களின் உடல் பருமன் 9 சதவீதத்தில் இருந்து இரண்டு மடங்காக அதாவது 18.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பருமனான ஆண்களின் எண்ணிக்கை 4.8 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில்,, குழந்தைகளின் உடல் பருமன் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

உடல் பருமன் ஏற்படுத்தும் நோய்கள்

இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூச்சு விடுவதில் சிரமம், மூட்டுவலி ஆகியவை உடல் பருமன் ஏற்படுத்தும் நோய்கள். உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் அதிக எடையை குறைக்க உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவுக்கு அதிகமான இளநீர் ஆரோக்கியத்தை பாதிக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News