குண்டு உடம்புக்கு குடை மிளகாய் ஒன்று போதும்: ஈசியா ஒல்லியாகலாம்

Weight Loss Tips: தொப்பையை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் நாம் பல வழிகளில் முயற்சிக்கிறோம். நமது தினசரி உணவுகளை சரியான வழியில் உட்கொண்டாலே நமக்கு தேவையான பலனை பெறலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 24, 2024, 06:36 PM IST
  • குடைமிளகாய் பலருக்கு பிடித்தமான ஒரு காயாக உள்ளது.
  • இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல வித பண்புகள் உள்ளன.
  • குடைமிளகாயிலும் அதிகமான மினரல்கள் உள்ளன.
குண்டு உடம்புக்கு குடை மிளகாய் ஒன்று போதும்: ஈசியா ஒல்லியாகலாம்

Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைப்பது என்பது இந்த காலத்தில் பலருக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. உடல் எடை அதிகரிப்பது ஒரு பிரச்சினையாக இருந்தாலும் குறிப்பாக தொப்பையில் கொழுப்பு சேர்ந்து விட்டால் அதை குறைப்பது மிகவும் கடினமான ஒரு வேலையாக உள்ளது. தொப்பை கொழுப்பை குறைக்க பலர் பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள் சிலர், கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். எனினும் இவற்றாலும் அனைவருக்கும் தேவையான பலன்கள் கிடைப்பதில்லை.  

Add Zee News as a Preferred Source

தொப்பையை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் நாம் பல வழிகளில் முயற்சிக்கிறோம். நமது தினசரி உணவுகளை சரியான வழியில் உட்கொண்டாலே நமக்கு தேவையான பலனை பெறலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. நாம் தினமும் உட்கொள்ளும் ஒரு காயை வைத்து தொப்பை கொழுப்பை எளிதில் குறைக்கலாம். அந்த காய் பற்றி இந்த பதிவில் காணலாம்.

குடைமிளகாய்

குடைமிளகாய் (Capsicum) பலருக்கு பிடித்தமான ஒரு காயாக உள்ளது. இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல வித பண்புகள் உள்ளன. இதில் பல நிறங்கள் உள்ளன. பச்சை, மஞ்சள், சிவப்பு என பல நிறங்களில் குடை மிளகாய்கள் கிடைக்கின்றன. அனைத்து விதமான குடை மிளகாயிலும் அதிகமான மினரல்கள் உள்ளன. குடைமிளகாய் உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை அளிக்கின்றது

உடல் எடையை குறைக்க குடைமிளகாய்

உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிப்பதோடு குடைமிளகாய் உடல் எடையை குறைக்கவும் (Weight Loss) உதவுகின்றது. இதை சரியான முறையில் உட்கொள்வதால் தொப்பையில் சேர்ந்திருக்கும் கொழுப்பை (Belly Fat) எளிதாக கரைக்கலாம். தொப்பை கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக குடைமிளகாயை தங்கள் எடை இழப்பு டயட்டில் (Weight Loss Diet) சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குடைமிளகாயை சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாக பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை தினமும் தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிக நார்ச்சத்து

குடைமிளகாயில் நார்ச்சத்து (Fiber) மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் நீண்ட நேரத்திற்கு வயிறும் நிரம்பிய உணர்வுடன் இருக்கிறது. இதை உட்கொண்டால் அவ்வப்போது எடுக்கும் பசி தவிர்க்கப்படுகிறது. இதனால் நாம் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதும் தவிர்க்கப்படுகிறது. இதன் மூலம் நாம் உட்கொள்ளும் கலோரிகளை நாம் எளிதாக கட்டுப்படுத்தலாம். இந்த வழியில் உடல் எடையை குறைக்கும் நமது முயற்சிக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!

வளர்சிதை மாற்றம் மேம்படும்

குடைமிளகாயில் கேப்ஸின் என்ற கூறு உள்ளது. இது வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை (Metabolism) அதிகரிக்கும் பணியை செய்கிறது. இதன் காரணமாக கொழுப்பு விரைவாக எறிய தொடங்குகிறது. மேலும் உடல் கொழுப்பை சேர்த்து வைப்பதும் குறைகின்றது. இதன் காரணமாக இந்த காய் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை விரைவில் குறைக்கிறது.

குறைந்த கலோரி

நாம் கலோரிகள் குறைவாக (Low Calorie) உள்ள உணவை உட்கொள்வது நல்லது. குடைமிளகாயில் கலோரியின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால் இது உடல் எடை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இதை உட்கொள்வதன் மூலம் கலோரியை அதிகரிக்காமலேயே நம் வயிறு நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.

வைட்டமின்கள் அதிகமாக உள்ளன

குடைமிளகாயில் ஏகப்பட்ட வைட்டமின்களும் மினரல்களும் உள்ளன. ஆனால் குறிப்பாக இதன் மூலம் உடலுக்கு வைட்டமின் சி அதிகமாக கிடைக்கிறது. இதன் காரணமாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இதன் மூலம் உடல் பருமனை எதிர்த்த போராட உடலுக்கு உதவி கிடைக்கிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News