Hepatic steatosis: கல்லீரலில் கொழுப்பு சேர்ந்துவிட்டதா: தவிர்க்க வேண்டிய உணவுகள்
Fatty Liver: கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் நோய்க்கு சிகிச்சையே இல்லை. வாழ்க்கை முறையில் செய்யும் மாற்றங்களே இதற்கான முழு முதல் சிகிச்சை
Foods For Fatty Liver: நமது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது கல்லீரல். ஆனால் கல்லீரலில் கொழுப்பு படிந்து அது வீங்கினால் அதன் வேலை மந்தமாகும்.
கல்லீரலில் கொழுப்பு படியும் நோய்க்கு நோய், Fatty Liver Disease என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இதை, கல்லீரல் ஸ்டீடோசிஸ் (hepatic steatosis) என்றும் அழைக்கின்றனர்.
கல்லீரலில் கொழுப்பு படிவதை இரண்டு வகையாக பிரிக்கின்றனர். அதிக மது அருந்துதல் (alcoholic fatty liver disease), காரணமாக ஏற்படலாம், மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் கொழுப்பு நோயை nonalcoholic fatty liver disease (NAFLD) என்று அழைக்கின்றனர்.
இந்த இரண்டு வகை நோய்க்கும் காரணம், உடல் பருமன், வகை 2 நீரிழிவு, கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்கள், ஹெபடைடிஸ் சி போன்ற சில வகையான நோய்த்தொற்றுகள் அல்லது சில வகையான மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை ஆகும்.
மேலும் படிக்க | Liver Health: கல்லீரல் பாதிப்பின் 4 முக்கிய அறிகுறிகள்
கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தும், இது கல்லீரலை சேதப்படுத்தும், நிலைமை மோசமானால் கல்லீரல் செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு என்ற நோய்க்கு சிகிச்சையளிக்க சிகிச்சைகள் ஏதும் இல்லை. வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாகவே இதை சரி செய்ய வேண்டும்.
கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது தெரிந்தால், மது அருந்துபவர்கள் அதை கட்டுப்படுத்துவதும் முடிந்தால் தவிர்ப்பதும் நலல்து. உடல் பருமனானவர்கள் எடையைக் குறைக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்வது, கலோரிகள், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் குறைவாக உள்ள உணவைப் உண்பது என தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொண்டால் போதும்.
மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்
கல்லீரலில் கொழுப்பு படிந்து வீக்கம் ஏற்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இது.
மது
அதிக குடிப்பழக்கத்தால் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் ஏற்படலாம். NAFLD வகை நோயாக இருந்தாலும் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவது நல்லது.
சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களை தவிர்க்கவும்.
அதிக இனிப்பு நுகர்வு, கல்லீரலில் கொழுப்பு படிவதை அதிகரிக்கும். எனவே, இனிப்பு பதார்த்தங்கள், மிட்டாய், குக்கீகள், சோடாக்கள் மற்றும் பழச்சாறுகள் போன்ற சர்க்கரை கலந்த உணவுகளை விலக்க வேண்டும்.
பொறித்த உணவுகள்
நிறைவுற்ற கொழுப்புகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இவை உங்கள் கல்லீரலில் அதிக கொழுப்பு படிய வழிவகுக்கும். வறுத்த உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும்.
அதிக உப்பு தேவையில்லை
கொழுப்பு கல்லீரல் அபாயத்தைக் குறைக்க, உப்பு உட்கொள்ளலை ஒரு நாளைக்கு 2.3 கிராம்களுக்கு குறைவாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
மாவு
முடிந்தவரை வெள்ளை மாவு மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை தவிர்க்கவும். இது மிகவும் பதப்படுத்தப்பட்டது மற்றும் நாரச்சத்து இல்லாதது என்பதால், அத்தகைய உணவுப் பொருட்கள் உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம் மற்றும் கல்லீரலில் கொழுப்பை அதிகரிக்கலாம். எனவே வெள்ளை மாவு பொருட்களை தவிர்க்கவும்.
சிவப்பு இறைச்சிகள்
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சிகளில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம், எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்க | கல்லீரல் நலம் பற்றி இந்த அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்
மெடிட்ரேனியன் டயட்
அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும் உணவு மெடிட்ரேனியன் உணவு என்று அழைக்கப்படுகிறது.. முழு தானியங்களில் தயாரிக்கப்பட்ட ரொட்டி, பாஸ்தா, கைக்குத்தல் அரிசி ஆகியவற்றை கூறலாம். மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் மெடிட்ரேனியன் டயட்டில் அடங்கும்
கல்லீரலில் கொழுப்பு படிமன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் தேவை. இவை அனைத்தும் மெடிட்ரேனியன் டயட்டில் உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe