Liver Health: கல்லீரல் பாதிப்பின் 4 முக்கிய அறிகுறிகள்

கல்லீரலின் வேலை உடலை சுத்திகரிப்பு செய்வது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 25, 2022, 08:00 PM IST
  • கல்லீரல் உயிரணுக்களில் இயல்பை விட அதிக கொழுப்பு சேர்வதால் பல பிரச்சனைகள் ஏற்படும்.
  • எதிர்காலத்தில், இது பல வகையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
  • இது கல்லீரல் செயலிழப்பிற்கும் வழி வகுக்கலாம்.
Liver Health: கல்லீரல் பாதிப்பின் 4 முக்கிய அறிகுறிகள் title=

கல்லீரலின் வேலை உடலை சுத்திகரிப்பு செய்வது.  இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கல்லீரல் பாதிப்பு  என்பது உடனடியாக ஏற்படாது, உங்கள் வாழ்க்கை முறை மோசமாக இருக்கும் போது அல்லது உங்கள் உணவில் கவனம் செலுத்தாமல் இருக்கும் போது, இந்த வகையான பிரச்சனை ஏற்படுகிறது. 

கல்லீரலில் கொழுப்பு சேரும் பிரச்சனை குறிப்பாக அதிக கொழுப்பு உணவுகளை உண்பவர்களுக்கும், ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்க்கிறது. கல்லீரல் உயிரணுக்களில் இயல்பை விட அதிக கொழுப்பு சேர்வதால் பல பிரச்சனைகள் ஏற்படும். எதிர்காலத்தில், இது பல வகையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இது கல்லீரல் செயலிழப்பிற்கும் வழி வகுக்கலாம். 

கல்லீரல் சேதமடைவதற்கு முன், உடலில் பல வகையான அறிகுறிகள் தென்படும். அது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இதற்கான அறிகுறிகளை அறிந்து கொண்டால், எதிர்காலத்தில்  ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.

1. தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம்

தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறிமால், நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கும். தொடர்ந்து  மஞ்சள் நிறம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்

2. பாதங்களின் வீக்கம்

சில சமயங்களில், பாதங்களில் வீக்கம் ஏற்படும் போது சிலர் அலட்சியம் செய்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் பெரும் சிக்கலில் சிக்க நேரிடும்.  கல்லீரல் பாதிப்பின் அறிகுறியில் ஒன்று கால் வீக்கம் என்பதால், இதுபோன்ற நிலையை அலட்சியம் செய்யாதீர்கள்.

3. சிறுநீரின் நிறம்

உங்கள் சிறுநீர் தொடர்ந்து அடர் நிறத்திலிருந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையெனில் கல்லீரல் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும், ஏனெனில் இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மருத்துவரை அணுகுவது நல்லது.

மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்

4. அதிகப்படியான சோர்வு

கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகளில் ஒன்று சோர்வு என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அடிக்கடி சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால், உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்துவது மற்றும் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் எளிதாக அகற்றலாம். ஆனால் இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News