Liver failure: கல்லீரல் நலம் பற்றி இந்த அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்

உடலில் கல்லீரல் செயலிழப்பின் அறிகுறிகள்: உணவைச் சரியாகச் செரிக்க வைப்பதில் இருந்து, உடலைச் சீராக வைத்திருப்பது வரை கல்லீரல் பல வேலைகளை செய்கிறது. கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதன் விளைவு உடலில் தெரியும். இருப்பினும், கல்லீரலில் பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறிகளை முன்னரே கண்டறியலாம். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதைக் காட்டும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

1 /5

மஞ்சள் காமாலை கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். ஏனெனில் மஞ்சள் காமாலையில் தோலின் நிறம் மற்றும் கண்களின் வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக மாறும். சிறுநீரும் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும். கல்லீரல் இரத்த சிவப்பணுக்களை ஒழுங்காக நிர்வகிக்க முடியாத போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.  

2 /5

கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் பிரச்சனை காரணமாக, சருமத்திற்கு அடியில் பித்த உப்பு அதிகம் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக, தோலில் ஒரு அடுக்கு குவிந்து, அரிப்பு ஏற்படுகிறது. அதாவது, தோல் தொடர்பான பிரச்சனைகளும் கல்லீரலுடன் தொடர்புடையவை ஆகும்.  

3 /5

உங்களுக்கு பசி குறைவாக இருந்தால், கொஞ்சம் உஷாராக இருங்கள். ஏனெனில் கல்லீரல் ஒரு வகையான பித்த சாற்றை உருவாக்குகிறது. இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. கல்லீரல் சரியாக வேலை செய்யாதபோது, ​​​​அதன் முழு செயல்பாடும் மோசமடைகிறது. இதன் காரணமாக பசியின்மை ஏற்படுகின்றது. 

4 /5

உங்களுக்கு இரத்தப்போக்கு இருந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் விதத்தில் நீங்கள் காயமடைந்து, அந்த காயங்கள் குணமடைய அதிக நேரம் எடுத்தால், நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

5 /5

ஐந்தாவது அறிகுறி உங்களுக்கு செறிவு இல்லாமல் இருப்பது. உண்மையில், கல்லீரலால் இரத்தத்தில் உள்ள நச்சுகளை வடிகட்ட முடியாவிட்டால், அது உடலின் மற்ற செயல்பாடுகளைத் தடுக்கத் தொடங்குகிறது. ஆகையால் இதுவும் ஒரு முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)