Poliovirus: ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் முதல் போலியோ நோய் உறுதி..மேலும் பரவ வாய்ப்பா?
ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் முதல் போலியோ நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நோய் தொற்று குறைந்துள்ளதாக தகவல்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் முதன் முறையாக போலியோ நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வரும் 4 வயது குழந்தை ஒன்றிற்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் போலியோ நோய் தாெற்று:
தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தானில் இதுவரை நடக்காத ஒன்று நிகழந்துள்ளது. இந்த நாட்டில் முதல் போலியோ நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. காபூலில் வாழும் 4 வயது குழந்தை ஒன்றுக்கு இந்த போலியோ நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து பரவி வரும் தகவலில் போலியோ தொற்று உறுதி செய்ப்பட்ட குழந்தை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பரவுகிறது?
கெட்ட நிலத்தடி நீர் மற்றும் மாசு நிறந்த சூழ்நிலைகளால் பரவிவரும் நோய், போலியாே. பல ஆண்டு காலமாக பரவி வந்த இந்நோய் மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இன்னும் சில நாடுகளில் இந்நோயின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது இந்த ஆண்டின் முதல் போலியோ நோய் ஆப்கானிஸ்தானில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டு 56 பேருக்கும் 2021ஆம் ஆண்டு 4 பேருக்கும் இந்நோய் உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் போலியோ நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், இந்த ஆண்டில் முதன் முறையாக ஒரு குழந்தைக்கு போலியோ நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Sun: சூரியனின் நிறம் என்ன? மஞ்சளும் இல்லை வெண்மையுமில்லை! பச்சை!!!
போலியோ இன்னும் எந்த நாடுகளில் உள்ளது?
ஆப்கானிஸ்தானில் இப்போது உறுதி படுத்தப்பட்டுள்ள போலியோ நோய் தொற்றுடன் சேர்த்து, உலகம் முழுவதும் இரண்டு போலியோ நோய் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட போலியோ ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இந்த ஆண்டின் முதல் போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் உலக சுகாதார மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் போலியோ தொற்றின் எண்ணிக்கை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே போலியோ பரவியது எப்படி?
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் நடந்த தாக்குதலின் போது இந்நோய் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பரவி இருக்கக்கூடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடியில் ஆப்கானிஸ்தான்
கடந்த 2021ஆம் ஆண்டு தாலிபன் ஆட்சியை பிடித்ததில் இருந்து, அந்நாட்டின் மக்களும் அவர்களின் பொருளாதாரமும் தள்ளாடி வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தான் மக்கள் பலர், சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு சென்று தங்களது குடும்பங்களை கவனித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமன்றி, தாலிபன் ஆட்சிக்கு கீழ் வாழும் மக்களும் அவர்களது கொடுமையான ஆட்சி முறையால் அல்லல் பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | வானிலை ஆய்வு மையத்தின் அலெர்ட்! அதி தீவிர புயல் மோச்சாவின் கோரத் தாண்டவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ