அடிவயிறு தொப்பை குறைக்கணுமா? இந்த டயட் சார்ட்டை ஃபாலோ செய்தால் போதும்`
Weight Loss Food: தற்காலத்தில் ஒவ்வொரு இரண்டாவது நபர் அதிகரித்து வரும் உடல் எடையால் சிரமப்படுகின்றனர். எனவே உடல் எடையைக் குறைக்க நீங்கள் எந்த மாதிரியான டயட்டைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
உடல் எடையைக் குறைக்கும் உணவுகள்: இன்றைய காலத்தில் ஒவ்வொரு நபரும் ரன்-ஆஃப்-மில் வாழ்க்கை காரணமாக அதிகரித்து வரும் உடல் எடையால் சிரமப்படுகிறார்கள். எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் ஆரோக்கியமான டயட்டை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உடல் எடையை குறைக்க என்ன மாதிரியான டயட்டை கடைபிடிக்க வேண்டும் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம்.
உடல் எடையை குறைக்க சிறப்பு டயட் சார்ட் இதோ:
காலை நேர உணவு (Breakfast)
ரவை தோசை (rava dosa) - பெரும்பாலும் மக்கள் காலை உணவாக பராத்தா சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் அதை உட்கொள்வது நல்லதல்ல. இதற்கு பதிலாக ரவை தோசை சாப்பிடலாம். ஆம், ரவை தோசை உடல் எடையை குறைக்க உதவுகிறது. எனவே தோசையுடன் உங்கள் நாளை தொடங்குங்கள். இதை செய்ய, ஒரு பாத்திரத்தில் புளிச்ச தயிர் (sour curd) எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு கிண்ணம் ரவையை கலக்கவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது அதில் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மாவு தயார் செய்யவும். பின்னர் ஒரு கடாயில் தண்ணீரை சூடாக்கி, அதில் இந்த மாவை ஊற்றி கலக்கவும், இப்போது உங்களின் ரவை தோசை ரெடி.
மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!
மதிய நேர உணவு (Lunch)
கடலை மாவு ஓமத்தால் செய்யப்படும் பராத்தா (Besan Ajwain Paratha) - உடல் எடையை குறைக்க, நீங்கள் மதிய உணவில் கடலை மாவு ஓமத்தால் செய்யப்படும் பராத்தா சாப்பிடலாம். இதற்கு, ஒரு கிண்ணம் கடலை மாவு, அரை கிண்ணம் கோதுமை மாவு, ஒரு சிட்டிகை உப்பு, அரை தேக்கரண்டி ஓமம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் (olive oil) ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் கலந்து ஒரு மாவை தயார் செய்யவும், இப்போது இந்த மாவை சிறிய பகுதிகளாக வெட்டி பராத்தா வடிவத்தில் உருட்டி, சமைக்கவும். இதை எல்லாம் வகையான காய்கறிகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
இரவு நேர உணவு (Dinner)
மல்டிகிரைன் பிரட் சாண்ட்விச் (Multigrain Bread Sandwich) - மல்டிகிரைன் பிரட்டின் 2 துண்டுகளை டோஸ்ட் செய்யவும், இப்போது அவகேடோ பேஸ்ட் எடுத்து, இந்த பேஸ்ட்டில் உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும். இப்போது ஒரு பக்கம் கிரேக்க தயிர் மற்றும் மற்றொரு பக்கம் அவகேடோ பேஸ்ட் தடவவும். மறுபுறம், துருவிய சீஸ், கேரட் மற்றும் கேப்சிகம் ஆகியவற்றை பிரட் மீது வைக்கவும். இப்போது இரவு உணவில் இதை சாப்பிட்டு உங்கள் எடையை குறைக்கவும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ