இனிப்பு சாப்பிடமுடியாதவர்கள் இந்த ஸ்நாக்ஸை சாப்பிடுங்கள்
உடல் எடை குறைப்பு உள்ளிட்டவைகளுக்காக டையட் பின்பற்றுபவர்கள் இனிப்பு சாப்பிட முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தால் அந்த கவலையை விடுங்கள்
உடல் எடை குறைப்பு மற்றும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக பெரும்பாலானவர்கள் டையட் பின்பற்றுகின்றனர். அவர்கள் சில உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றினாலும், அருகில் இருப்பவர்கள் அந்த உணவை சாப்பிடும்போது டையட்டை நினைத்து வருத்தப்படுவார்கள். சில நேரங்களில் சாப்பிட முடியாத உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை கூட வரும்.
அவர்களின் நாவுக்கு தீனி போடும்விதமாக இனிப்பு உணவுகளுக்கு மாற்றாக சில உணவுகளை சாப்பிடலாம். இவை அந்த இனிப்பு உணவுகளை சாப்பிட முடியவில்லை என்ற ஏக்கத்துக்கு தீனி போடும். அந்தவகையில் எந்தெந்த உணவுகளை மாற்றாக எடுத்துக் கொள்ளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா?
ஊறுகாய்
பெரும்பாலான மக்கள் காரமான உணவுகளை தவிர்க்கிறார்கள். வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் புரோபயாடிக்குகள். மேலும் இது சமச்சீர் உணவுக்கு ஏற்றது. ஊறுகாய் நல்ல பாக்டீரியாக்களின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இது குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கூடுதலாக, சர்க்கரையை கட்டுப்படுத்துவதன் மூலம் நல்ல செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.
பருப்பு
உணவில் வெவ்வேறு பருப்பு வகைகள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் துவரம், பாசி உள்ளிட்ட பல்வேறு வகையான பருப்பு வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். மேலும், முக்கியமான விஷயம் என்னவென்றால், பருப்பு சர்க்கரையின் (இனிப்பு) ஆசையைக் குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க | பாகற்காயின் பலே நன்மைகள்: கசப்பு களஞ்சியம் பாகற்காய்
தினை
தினை பசையம் இல்லாதது. இதில் ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இது கோதுமையை விட சத்தானது. உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது. வாரம் இருமுறை சாப்பிடலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR