கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலக மக்களை அச்சுறுத்தி வந்தது. கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்தாலும், இது குறித்த அச்சம் இன்றளவும் மக்களிடையே நீங்கவில்லை, இந்நோய்க்கு இன்னும் ஒரு தீர்வை காணமுடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றது. என்னதான் ஒவ்வொரு நாடும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறிந்து ஓரளவு இதன் பாதிப்பை குறைக்க வழிவகை செய்தாலும், உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தாக்குதல், ஒருமுறை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் நோய் தொற்றிகொள்ளுதல் போன்றவை பெரும் கவலையை அளிக்கிறது. ஒருமுறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகும் மீண்டும் கொரோனா வைரஸால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மேலும் படிக்க | லோ பிபி என்றால் என்ன? அதை முற்றிலும் சரிசெய்ய மிக சுலப வழி என்ன?
வைரஸின் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பிறழ்வுகள் காரணமாக வைரஸ்கள் பல்வேறு விதமாக உருமாற்றமடைகிறது. இதன் விளைவாக, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை மறுபடியும் இது தாக்குகிறது. இது கடுமையானதாகவும், உருவான நோய் எதிர்ப்பு சக்தியை தடுப்பதாகவும் அமைந்துள்ளது. மேலும், இது மீண்டும் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அக்டோபர் 2021ல் நடத்தப்பட்ட ஆய்வில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு, உங்கள் உடல் வைரஸ்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இது உங்களை மீண்டும் நோய்த்தொற்றிலிருந்து குறைந்தது மூன்று மாதங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரை பாதுகாக்கிறது.
அதேசமயம் நீண்ட காலமாக உங்கள் உடல் வைரஸுடன் தொடர்பு கொள்ளாதபோது, பழைய வைரஸ் பற்றிய நினைவு இல்லாமல் போகும், அதனால் உடலில் ஆன்டிபாடிகளின் உற்பத்தி குறையக்கூடும் என்று நிபுணர்கள் சந்தேகமடைகின்றனர். இதனால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறைந்து மீண்டும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்ற கொரோனா மாறுபாடுகளை காட்டிலும் ஓமிக்ரான் தான் அதிகளவில் மீண்டும் மக்களை தொற்றுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரான் தான் 5.4 மடங்கு அதிகமாக மீண்டும் தொற்றை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. கொரோனா நோயால் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 30-90 நாட்களில் மறுபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | எடை குறைக்க உங்களுக்கு உதவும் மாமருந்து ‘புதினா’
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR