தப்பி தவறி கூட முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க
Avoid Eating These Foods with Eggs: முட்டை நாம் உண்ணும் உணவுகளில் அதிக சத்துக்களை கொண்ட ஓர் உணவுப் பொருள். இதில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள.
முட்டையில் இருக்கக்கூடிய சத்துக்கள் நம் உடலுக்கு என்னெற்ற நன்மைகளை ஏற்படுத்தி தருகிறது. பொதுவாக முட்டையில் புரத சத்து, வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் இது நம்முடைய உடலுக்கு தேவையான முழு ஆற்றலையும் தெம்பையும் தருகிறது. இத்தகைய முட்டையை பலவாறு சாப்பிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். ஆனால் முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சேர்த்து சாப்பிடும் போது அது நும்முடைய உடலுக்கு சில கெடுதலையம் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் . எனவே அந்த உணவுகள் எவையென்பதை இப்போது காண்போம். தற்போது முட்டையுடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
முட்டையுடன் மற்றும் சோயாபால்
முட்டையில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும். அதன்படி இந்த இரண்டு கலைவையும் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது கூடவே உடல்சிதைவு பிரச்சனையை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்
சர்க்கரை மற்றும் முட்டை
முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகுகிறது. மேலும் முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை இவை உடைக்கும். நச்சுத்தன்மையுள்ள இந்த சேர்மத்தை உறிஞ்சுவது மிகவும் கடினம், மேலும் இரத்தம் உறைந்து போகும்.
முட்டை மற்றும் பன்றி இறைச்சி
முட்டை மற்றும் பன்றி இறைச்சி இரண்டிலுமே அதிக புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களைக் கொண்டவை. இவற்றை ஒன்றாக உண்ணும் போது எவ்வளவு விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறதோ, அதே வேகத்தில் உடல் ஆற்றலைக் குறைத்து, சோம்பேறியாக்கிவிடும்.
பழங்கள் மற்றும் முட்டை
ஆப்பிள், பேரிக்காய், திராட்சை, பிளம்ஸ், ஆப்ரிகாட், மற்றும் தர்பூசணி போன்ற பழங்களுடன் முட்டை உள்ளிட்ட புரதப் பொருட்களுடன் சாப்பிட அறிவுறுத்தப்படுவதில்லை. முட்டையுடன் பழங்களை சேர்த்து சாப்பிட்டால் செரிமான மண்டலத்தில் சிக்கல் ஏற்படலாம். எனவே இதை சேர்த்து சாப்பிட கூடாது.
உருளைக்கிழங்கு மற்றும் முட்டை
உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து செய்யப்படும் உணவுப்பண்டங்களை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் உருளைக்கிழங்கில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்தை நம்முடைய உடலானது உறிஞ்சுவதை தடுக்கிறது. எனவே இந்த இரண்டு பொருட்களை கொண்டு உணவுப்பண்டகளை தயாரித்து உண்பது செரிமானத்தை மிகவும் தாமதமாக்கி அஜீரணத்தை ஏற்படுத்தும்.
வாத்து இறைச்சி மற்றும் முட்டை
முட்டையுடன் சேர்த்தோ அல்லது முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாத்து இறைச்சியில் இனிப்பு தன்மையும் குளிர்ச்சியை உண்டாக்கும். முட்டையிலும் அதிக அளவு புரதமும் குளிர்ச்சியை உண்டாக்கும். ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR