வாயு பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி? வீட்டு மருத்துவம்
வாயு பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு எளிமையான வீட்டு மருத்துவம்
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காரமான மற்றும் அதிக எண்ணெய் நிறைந்த உணவுகள் உண்ணப்படுகின்றன. இதன் காரணமாக மக்கள் வயிற்று வலி, வாயு, அமிலத்தன்மை, புளிப்பு ஏப்பம் அல்லது வயிற்றுப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பரபரப்பான வாழ்க்கை முறையும் இந்த நோய்களுக்கு மூலகாரணம்.
இந்த 4 பொருட்களை சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்
வயது அதிகரிக்கும் போது, செரிமான அமைப்பு முன்பை விட பலவீனமடையத் தொடங்குவதால், வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட தொடங்குகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் உணவில் இந்த 4 இயற்கை உணவுகளை சேர்த்துக் கொண்டால், இதுபோன்ற அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
ALSO READ | தலைக்கு குளிக்கும்போது முடி அதிகம் கொட்டுகிறதா? இப்படி செய்து பாருங்கள்
1. இஞ்சி
ஜலதோஷம் மற்றும் சளி இருக்கும்போது நாம் அடிக்கடி இஞ்சியை சாப்பிடுகிறோம். ஆனால் அதில் உள்ள ஜிஞ்சர் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற கூறுகள் வயிற்று பிரச்சினைகளை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. வெந்நீரில் இஞ்சியை கொதிக்க வைத்து டீ குடிப்பது வயிற்று பிரச்சனைக்கு தீர்வைக் கொடுக்கும்.
2. ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை ஜூஸாக குடிப்பதற்கு பதிலாக முழுவதுமாக சாப்பிடுவது நல்லது. ஜூஸாகவும் குடிக்கலாம். இதில் மலமிளக்கியானது வயிற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. வயிற்று பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
3. கடுகு விதைகள்
கடுகு விதையில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுவதால், செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகிறது. குடல் இயக்கத்தால் ஏற்படும் வாயு மற்றும் வயிற்று வலியையும் இது குணப்படுத்துகிறது.
ALSO READ | Pain killer: வலி நிவாரணி மருந்துகளில் இவ்வளவு பிரச்சனையா? இதுக்கு வலியே தேவலாம்!
4. எலுமிச்சை
எலுமிச்சை பல நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. எலுமிச்சம்பழம் அல்லது அதன் சாற்றை சாலட்டில் பிழிந்து சாப்பிடலாம். இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. வயிற்றுப் பிரச்சனைகளை நீக்கும் பெக்டின் நார்ச்சத்தும் இதில் உள்ளது.
(குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR