தலைக்கு குளிக்கும்போது முடி அதிகம் கொட்டுகிறதா? இப்படி செய்து பாருங்கள்

Hair Care Tips: தவறான முறையில் தலைமுடியைக் கழுவுதல் மற்றும் அதிகப்படியான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை முடி சேதத்திற்கு வழிவகுக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2022, 07:55 PM IST
  • கூந்தலை அழகாக வைத்திருக்க, கூந்தல் பராமரிப்பு மிகவும் அவசியமாகும்.
  • தலைமுடியைக் கழுவுவதற்கு மிகவும் குளிர்ந்த நீரையோ அல்லது வெந்நீரையோ பயன்படுத்த வேண்டாம்.
  • உச்சந்தலையில் கண்டிஷனரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தலைக்கு குளிக்கும்போது முடி அதிகம் கொட்டுகிறதா? இப்படி செய்து பாருங்கள்  title=

கூந்தலை அழகாக வைத்திருக்க, கூந்தல் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். தவறான முறையில் தலைமுடியைக் கழுவுதல் மற்றும் அதிகப்படியான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை முடி சேதத்திற்கு வழிவகுக்கும். 

இதனால் கூந்தலில் பிரச்சனைகள் (Hair Problems) ஏற்படுவதோடு கூந்தலில் வறட்சியும் ஏற்படும். உங்கள் தலைமுடியை சேதத்திலிருந்து பாதுகாக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

தலைமுடியை சுத்தம் செய்வதற்கான சரியான வழி

ஷாம்பூ கொண்டு தலைக்கு குளிக்கும்போது, அதிக தண்ணீர் விட்டு, முடியை சரியாக அலசுவது மிக அவசியமாகும். அவ்வாறு செய்யத் தவறினால் முடிக்கு சேதம் ஏற்படலாம். ஷாம்பூ கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன், முடியை நன்றாக சீர் செய்து நன்றாக மசாஜ் செய்யவும். 

தலைமுடியைக் கழுவுவதற்கு மிகவும் குளிர்ந்த நீரையோ அல்லது வெந்நீரையோ பயன்படுத்த வேண்டாம். இதனால் முடி வறண்டு போகலாம். சாதாரண நீரில் முடியைக் கழுவவும். மேலும், தினமும் தலைக்கு குளிப்பதைத் தவிர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே தலைக்கு குளிப்பது நல்லது. 

கண்டிஷனரை பயன்படுத்துவதில் கவனம் தேவை

தலைமுடிக்கு ஷாம்பு போட்ட பிறகு, சரியான கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். ஆனால் அதிக கண்டிஷனரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறையாவது முடியின் ஆழமான சீரமைப்பு அவசியம். உச்சந்தலையில் கண்டிஷனரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும்.

ALSO READ | Black Hair Tips: வெளுத்த நரைமுடியை கருமையாக்க சுலபமான குறிப்புகள் 

கூந்தலை இந்த வகையில் உலர விடவும் 

தலைமுடியை கழுவி கண்டீஷன் செய்த பிறகு சரியான முறையில் உலர்த்துவது மிக அவசியமாகும். எப்போதும் காட்டன் துணியால் முடியை நன்றாக உலர வைக்கவும். இது முடியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, முடி உடையாமல் பார்த்துக்கொள்ளும். துண்டு கொண்டு முடியை மிகவும் வேகமாக தேய்ப்பதை தவிர்க்கவும். அடிக்கடி டிரையரை பயன்படுத்துவதும் தவறு. இதன் வெப்பம் முடியை சேதப்படுத்தும்.

முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்ற கூந்தல் பராமரிப்புப் (Hair Care) பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் முடி சேதமடைகிறது. இவை முடியின் துளைகளை அடைத்து, முடி உதிர்வதற்கு காரணமாகின்றன.

நீண்ட நேரம் முடியை கழுவ வேண்டாம்

அதிக நேரம் தலைக்கு குளித்து, முடியை நீண்ட நேரத்திற்கு நீரில் சுத்தம் செய்தால், கூந்தல் நீண்ட நேரம் ஈரமாக இருக்கும். இதனால், முடி வலுவிழந்து உடையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | Pain killer: வலி நிவாரணி மருந்துகளில் இவ்வளவு பிரச்சனையா? இதுக்கு வலியே தேவலாம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News