முத்தமிடத் தூண்டும் சருமம் வேண்டுமா: இந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தவும்
பட்டுப்போல் மென்மையான சருமத்தைப் பெற இந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம், இது அதிக செலவில்லாத வீட்டிலேயே தயாரிக்கும் அழகு ஃபேஸ் பேக்
பருவகால மாற்றத்தால் உங்கள் சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாகிவிட்டதா இல்லை தோல் வறண்டுவிட்டதா? அல்லது கலவையான சருமமாக இருக்கிறதா? சருமத்தை பராமரிக்க சிறந்த ஃபேஸ் பேக்குகள் இவை.
இந்த பேஸ் பேக்குகளை பயன்படுத்தினால் உங்கள் சருமம் பட்டுப்போல் மென்மையாகிவிடும். கண்ணாடியில் பார்க்கும் உங்கள் முகத்தை முத்தமிடலாம் என்று உங்களுக்கே தோன்றிவிடும்.
பொதுவாக, வறண்ட சருமமாக இருந்தாலும், எண்ணெய் பசையாக இருந்தாலும் அல்லது கலவையான சருமமாக இருந்தாலும் (Skin Health), பருவமழையின் போது சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.
மழைக்காலத்தில் முகத்தில் எண்ணெய் பசை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று ஈரப்பதம். ம்ழைக்காலம், சருமத்தின் மீது கூடுதல் அன்பையும் கவனிப்பையும் கோருகிறது.
மேலும் படிக்க | இந்த உணவுகளை சாப்பிட்டால் ஒல்லியாகலாம்: எடை குறைப்பு டிப்ஸ்
சருமத்தை சீர் செய்ய நீங்கள் பல்வேறு தயாரிப்புகளில் பணத்தை செலவழித்து, தோல் பராமரிப்பு முறைகளை பின்பற்றலாம் அல்லது உங்கள் சருமத்தின் அமைப்பையும் பளபளப்பையும் மேம்படுத்த உங்கள் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு உதவலாம்.
டாக்டர்.சீமா மாலிக், எம்.டி., எலிகன்சா (தோல் மற்றும் ஒப்பனை அறுவை சிகிச்சை கிளினிக்) பல்வேறு தோல் வகைகளின் அரிப்பு மற்றும் கொழுப்பைத் தடுக்க சில DIY ஃபேஸ் பேக்குகளை பகிர்ந்து கொண்டுள்ளார்:
வறண்ட சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்:
10 பாதாம் எடுத்து, அதை அரைத்துக் கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கலக்கவும். பிறகுக் முகத்தில் பூசி, 5 முதல் 7 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
1 டீஸ்பூன் தேனை 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் ஜோஜோபா எண்ணெயுடன் (jojoba oil) கலக்கவும். இதை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் தடவவும். அதை 10 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
மேலும் படிக்க | தொண்டை வலியைப் போக்கும் தேநீரின் திகட்டாத மாயம்
எண்ணெய் பசை சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்:
எண்ணெய் சருமத்தை சுத்தப்படுத்த ஒரு தூய ஓட்ஸ் ஸ்க்ரப் பயன்படுத்தவும். 2 தேக்கரண்டி ஓட்மீலை சிறிது ஆரஞ்சு சாறு அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து ஸ்க்ரப் செய்யவும். இதை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
பழுத்த பப்பாளி கூழை முகத்தில் பூசி, அது நன்றாக உலர்ந்த பிறகு முகத்தைக் கழுவவும். முகம் அழகாக மாறுவதோடு, சருமம் பொலிவு பெறும்.
மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கான நம்பர் 1 ஜூஸ்: விலையும் மலிவு
கலவையான சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்:
2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 2 சொட்டு ஸ்ட்ராபெரி எண்ணெய் மற்றும் ஆரஞ்சு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
எந்த பேஸ் பேக்கை பயன்படுத்தினாலும், முகத்தை கழுவிய பிறகு, உங்கள் தோல் வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். உங்கள் தோல் வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டி இங்கே.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR